பொது செய்தி

தமிழ்நாடு

14 சதவீதம்! காஞ்சி மாவட்டத்தில் பால் உற்பத்தி அதிகரிப்பு....தீவன பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை

Added : ஏப் 25, 2019
Advertisement
 14 சதவீதம்! காஞ்சி மாவட்டத்தில் பால் உற்பத்தி அதிகரிப்பு....தீவன பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பால் உற்பத்தி, கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில், 14 சதவீதம் உயர்ந்துள்ளது. உற்பத்தியை அதிகரிக்க, பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக, பால்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக, கால்நடைகள் வளர்ப்பில் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானத்தை நம்பி, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.மாவட்டத்தில், 290 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அந்தந்த பகுதிகளில் உள்ள உறுப்பினர்கள் கொடுக்கும் பால் சேகரிக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள, பால் சேமிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.அவர்கள், மாநில நிர்வாகத்தின் கீழ் செயல்படும், பால் பண்ணைகளுக்கு வழங்குவர். அந்நிறுவனம், மக்களுக்கு தேவையான, பால், நெய், பவுடர், போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.மாவட்டத்தில், 17 பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் மூலம், ஆவின் பாக்கெட் பால், பல பகுதிகளில் வினியோகம் செய்யப்படுகிறது. கொழுப்பு சத்து பொறுத்து, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, அவர்கள் கொடுக்கும் பாலுக்கு, அதன் கொழுப்பு மற்றும் இதர சத்தின் தன்மையை பொறுத்து, விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக, பசும் பால், லிட்டருக்கு, 28 ரூபாய்; எருமை பால், 35 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.மேலும் பால் கொடுக்கும் உறுப்பினர்களுக்கு, இடத்திற்கு தகுந்தமாதிரி பாலுக்கான விலை மாதம் அல்லது, 15 நாட்களுக்கு ஒரு முறை என, வழங்கப்படுகிறது.
இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட பால்வள துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பாண்டில், கால்நடை எண்ணிக்கை, மாவட்டத்தில் அதிகம் உள்ளது. கடந்தாண்டில் பால் கறவை மாடுகள், 17 ஆயிரத்து 88; நடப்பாண்டில், 17 ஆயிரத்து 371.கோடை காலத்தில், தீவன பற்றாக்குறையை சமாளிக்க, தீவனம் கிலோ, 18 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, 16 ரூபாய்க்கு வழங்குகிறோம்.இது தவிர, பால் மாடுகளுக்கு மிகவும் தேவையான தாது உப்பு கிலோ, 42 ரூபாய்க்கு வாங்கி, சங்க உறுப்பினர்களுக்கு, 22 ரூபாய்க்கு மானியத்தில் கொடுக்கிறோம்.கூட்டுறவு சங்க கால்நடைகளுக்கு சிகிச்சை, முறையானபராமரிப்பு குறித்து, டாக்டர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது.இதனால், பால் உற்பத்தி, கடந்த ஆண்டை விட, 14 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பால் சேமிப்பு நிலையங்கள்எலப்பாக்கம், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், பெருநகர், அச்சிறுப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் பால் சேமிப்பு நிலையங்கள் உள்ளன. அதே போல், பால் குளிரூட்டும் நிலையங்கள், பாலுசெட்டிசத்திரம், சானுார் ஆகிய இரு இடங்களில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X