சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருக்கழுக்குன்றத்தில் 40 சவரன் கொள்ளை

Added : ஏப் 25, 2019
Advertisement

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அருகே, இரு வீடுகளின் பூட்டை உடைத்து, 40 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட தேசுமுகிப்பேட்டையைச் சேர்ந்தவர் தேவதாஸ், 64. இவர், குடும்பத்துடன், ஆந்திரா அருகே காளஹஸ்தி கோவிலுக்கு சென்று, நேற்று முன்தினம் மதியம், வீடு திரும்பினார். அப்போது, பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.அதன் பின், பீரோவில் இருந்த, 30 சவரன் நகை, 25 ஆயிரம் ரூபாய், கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.அதே போல், திருக்கழுக்குன்றம், பெரிய தெருவைச் சேர்ந்தவர் மணி, 75; ஓய்வு பெற்ற எல்.ஐ.சி., ஊழியர். கடந்த, 22ம் தேதி, குடும்பத்துடன், உறவினர் திருமணத்திற்கு நாகர்கோவில் சென்றுள்ளார். நேற்று முன்தினம், இவர் வீட்டுக்கு வந்த வேலைகாரர்கள், பூட்டு உடைக்கப்பட்டது குறித்து, மணிக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, அவர் மட்டும் வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த, 10 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.தேவதாஸ், மணி புகார்களை, திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X