பதிவு செய்த நாள் :
பாதுகாப்பு பிரச்னை குறித்து பேசுவது ஏன்?
பிரசாரத்தில் பிரதமர் மோடி விளக்கம்

தர்பங்கா:''பயங்கரவாதத்தை ஒழித்தால், அதற்காக செலவிடப்படும் தொகையை, மக்கள் நலப் பணிகளுக்கு செலவிட முடியும். இதன் மூலம், ஏழ்மையை ஒழிக்க முடியும். அதனால்தான், பயங்கரவாதம், பாதுகாப்பு பிரச்னை குறித்து பேசுகிறேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, 40 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங் களாக, தேர்தல் நடக்கிறது. பீஹாரின், தர்பங்காவில் நேற்று நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசிய தாவது:தேர்தல் பிரசார கூட்டங்களில், பயங்கர வாதம் மற்றும் பாதுகாப்புப் பிரச்னைகள் குறித்து நான் பேசுவதை, எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இது என்ன முக்கியமான பிரச்னையா என, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இழப்பு

நமது அண்டை நாடு, பயங்கரவாத உற்பத்தி

மையமாக உள்ளது. சமீபத்தில், இலங்கையில் நடந்த பயங்கரவாத சம்பவத்தில், 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலால், அந்த நாட்டுக்கு, எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது, என்பதை புரிந்து கொள்ளலாம். பிரதமர் உள்பட, முக்கிய தலைவர்களுக்கு, அதிக அளவில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.இதற்காக, அதிக அளவில் செலவிட வேண்டியுள்ளது.
மேலும், போலீஸ் மற்றும் ராணுவத்தில் கீழ் நிலையில் உள்ளவர்கள், ஏழை எளிய மக்களே. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், இவர்கள் உயிரிழக்கின்றனர் அல்லது பணியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.அதனால், பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு பிரச்னை என்பது, நாட்டின் ஏழை, எளிய மக்களுடன் நேரடி தொடர்பு உள்ளது. இந்தப் பிரச்னையை சரி செய்தாலே, அதற்காக செலவிடப்படும் பணம், ஏழை எளிய மக்களின் நலனுக்காக, செலவிட முடியும். இதன் மூலம், ஏழ்மையை ஒழிக்க முடியும்.
கவலை வேண்டாம்

இது, மக்களுக்கு புரிகிறது; ஆனால் அரசியல்வாதி களுக்கு புரியவில்லை என்பதுதான் வேடிக்கை.

Advertisement

அதனால்தான்,இந்தப் பிரச்னை குறித்தே நான் அதிகம் பேசுகிறேன்.உங்களின் காவல்கார னாக, நான் இருக்கும் வரையில், பாதுகாப்பு பிரச்னை குறித்து கவலைப்பட வேண்டாம்.

ஆனால், 40, 20 தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள், ஏன், கர்நாடகாவில், எட்டு தொகுதியில் மட்டும் போட்டியிடும், கட்சி தலைவர் கூட, பிரதமர் கனவில் உள்ளனர். இவர்களா, நாட்டு மக்களை காப்பாற்ற போகிறார்கள்.

பொய் பிரசாரம்

தாங்கள் ஆளும் மாநிலங்களில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாகவும், அதை, நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்றும், காங்., கூறுகிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதனால் பயனடைந்துள்ளனர். ஏழை, எளிய மக்கள் பயனடையவில்லை. இந்த பொய் பிரசாரம், மக்களிடையே எடுபடாது.

மோடிக்கு எதிராக பிரசாரம் செய்து வந்த எதிர்க்கட்சிகள், மூன்று கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், அது எடுபடாது என்பதை புரிந்து உள்ளனர். அதனால், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் தொடர்பான பிரச்னையை கையில் எடுத்துள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
26-ஏப்-201921:36:37 IST Report Abuse

Ramakrishnan Natesan

Rate this:
Velu -  ( Posted via: Dinamalar Android App )
26-ஏப்-201921:19:56 IST Report Abuse

Velucomedy piece

Rate this:
26-ஏப்-201918:17:56 IST Report Abuse

ஆப்புபின்னே எதைச்சொல்ல முடியும்? 15லட்ச ரூவா போட்ட சாதனையையா? 2 கோடி வேலை குடுத்த சாதனையையா? இல்லே 100 நாள்ள 150 லட்சம் கோடி வெளீல கொண்டுவந்த சாதனையையா?

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X