பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சித்தா படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு உண்டா?

தமிழக அரசு சரியான வழிகாட்டுதல் வழங்காததால், சித்தா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு அடிப்படையில் நடக்குமா; பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்குமா என, தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 சித்தா, படிப்புகளுக்கு,  'நீட்' தேர்வு ,உண்டா?

நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறு கிறது.


சுற்றறிக்கை

அதேபோல, சித்தா, யோகா, ஆயுர்வேதம், ஓமியோபதி, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட

இந்திய மருத்துவ முறை படிப்புகளும், 2018 - 19 கல்வியாண்டு முதல், நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது.இதை, தமிழக அரசு ஏற்க மறுத்தது.


'இந்திய மருத்துவகவுன்சில் சட்டம், 1970ன் உள்ள விதிமுறைப்படி, சித்தா படிப்புகளுக்கு, 2018 - 19க்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தியது.

இந்நிலையில், '2019 - 20ம் கல்வியாண்டுக்கு, இந்திய மருத்துவ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கையை, நீட் தேர்வு அடிப்படையில் நடத்த வேண்டும்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகத்துக்கு, ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.
இதனால், இந்தாண்டு, மாணவர் சேர்க்கை, எந்த அடிப்படையில் நடக்கும் என, மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.


வழிகாட்டுதல்

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும்

Advertisement

ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறிய தாவது:ஆயுஷ் அமைச்சகத்தின் சுற்றறிக் கையை சுட்டிக்காட்டி, இதற்கு வழிகாட்டுதல் வழங்கும்படி, தமிழக அரசுக்கு, கடிதம் எழுதியுள்ளோம்.


தற்போது, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், மே, 23க்கு பின், தமிழக அரசு வழிக்காட்டுதல் வழங்கும். அரசு எடுக்கும் முடிவின்படி, மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு, அவர்கள் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-ஏப்-201908:51:42 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎல்லாவற்றிக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம்

Rate this:
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
26-ஏப்-201906:50:43 IST Report Abuse

Balamurugan Balamuruganசித்த மருத்துவத்தைப் பற்றி அரசாங்கத்திற்கு என்ன தெரியும் பரம்பரை பரம்பரையாக சித்த மருத்துவம் பார்ப்பவர்கள் மட்டுமே சித்த மருத்துவத்தைப் பற்றி தெரியும் பெரும்பாலான பாஷாண பொருட்கள் கிடைப்பதில்லை இதை காங்கிரஸ் அரசே திட்டமிட்டு தடை செய்துள்ளது சித்தமருத்துவ புத்தகங்களை வைத்துக்கொண்டு கல்லூரியில் பாடம் படிப்பதால் என்ன அனுபவம் கிடைக்கும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது சித்த மருத்துவம் என்ற படிப்பை உருவாக்கி பணம் சம்பாதிப்பதிலேயே அரசாங்கம் குறியாக உள்ளது இதற்கு நீட் ஒன்று தேவையா பாரம்பரிய சித்த மருத்துவர்களை ஊக்குவித்தால் சித்த மருத்துவம் வளரும் அவர்களுக்கு தடை போட்டு விட்டு சித்த மருத்துவத்தை வைத்து ஏன் அரசாங்கம் வியாபாரம் செய்கிறது

Rate this:
Manian - Chennai,இந்தியா
26-ஏப்-201912:22:13 IST Report Abuse

Manianநானும் ஓரளவு சிதத மருத்துவம் தெரிந்தவனே. ஆனால், மேல் நாட்டு விஞ்ஞான முறைப்படி, கொடுத்த மருந்தில் எந்த ரசாயனக்கூறு புள்ளி விவரப்படி பலன் தந்தது என்று தெரியாதே. உதாரணமாக, வாய் புண்ணிற்கு அதிமதுர விழுதை தடவினால், மாசிக்காய் விழுதை தடவினால் அந்த புண் 3 நாளில் சரியாகும். பொதுவாக வைட்டமின் பி 12, டி, பி காம்ளக்ஸ் குறைவால் வருகிறது. ரத்தப் பரிசோதனை தேவை. அப்போ மாசிக்காயில் வலி நிவாரணி, வைட்டமின் பி 12 இருக்கிறதா, என்ன அளவில் என்று தெரியாது. மூல வியாதிக்கு தினமும் 4 தாமறை விதைகளை உள்ள பச்சை முளையை எடுத்துவிட்டு(அதில் மைளைக்க தேவையான புரோட்டீன் ஹைடிரஜன் சயனைடாக இருக்கும், தின்றால் ஒவ்வாமையால் வாந்தி வரும், பச்சை வேர்கடலையும் அது போலவே), 48 தின்றால் அந்தவியாதி குணமாகும்.இலவசமாக இந்த சேவை செய்திருக்கறேன். சுருக்கமாக ஆராய்ச்சி செய்து காப்புரிமை பெறாமல் வீண் பெருமை பேசுவதால் பயன் இல்லை. பரிசோதனை கூடம், ரசாயனப்பிரிவு இல்லாத கல்வியில் பகுத்தறிவு இல்லை. ...

Rate this:
Manian - Chennai,இந்தியா
26-ஏப்-201905:16:30 IST Report Abuse

Manianநீதி தேர்வில் பெயிலானால், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பாசானவர்களாக அறிவிக்க படுப்வார்கள். மாமுல் ஏழை கொஞ்சம் ஜாஸ்தி, அவ்ளோதான் கல்வி நிற்க கம்பமாடன்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X