பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு?

சென்னை, ''தமிழகத்தில், ஓட்டு எண்ணும் மையங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதுடன், நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகள் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கு, 18ம் தேதி தேர்தல் நடந்தது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 45 ஓட்டு எண்ணும் மையங்களில், பூட்டி, சீலிடப்பட்ட அறைக்குள், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.


30 கேமராக்கள்

இந்த அறைக்கு வெளியே, 988 துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு மையத்திலும், 20 முதல், 25

வீரர்கள், சுழற்சி முறையில், பாதுகாப்பில் உள்ளனர்.இரண்டாவது அடுக்கில், துப்பாக்கி ஏந்திய போலீசார், 1,522 பேர் பாதுகாப்பில் உள்ளனர்.

ஒவ்வொரு மையத்திலும், 40 போலீசார் வரை உள்ளனர். மூன்றாவது அடுக்கில், 1,589 ஆயுதப்படை போலீசார், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு மையத்திலும், குறைந்தது, 40 போலீசார் உள்ளனர். நான்காவது அடுக்காக, வெளிவட்டத்தில், 3,768 சட்டம், ஒழுங்கு போலீசார், பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இவர்கள் அனைவரும், கூடுதல் எஸ்.பி., அல்லது, டி.எஸ்.பி., தலைமையில், பணி செய்து வருகின்றனர். ஒட்டு மொத்தமாக, துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் என, 7,922 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.ஒவ்வொரு மையத்திலும், குறைந்தது, 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


கண்காணிப்பு கேமரா பதிவுகளை, வேட்பாளர்களின் ஏஜண்டுகள் பார்க்க, வசதி செய்யபட்டு உள்ளது. அவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப் பதிவு அறை வரை அழைத்து செல்லப் படுவர். தேர்தல் நடத்தும் அலுவலர், எஸ்.பி., ஆகியோரும், அவ்வப்போது மையங்களைப் பார்வையிடுவர்.
ஓட்டு எண்ணும் மையங்கள், சில இடங்களில்,

Advertisement

கல்லுாரிகளில் அமைக்கப்பட்டுள்ளன.அங்கு, மாணவ, மாணவி யர் சேர்க்கைக்குஇடையூறு இல்லாமல் செயல்படும்படி, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங் களில், தடையில்லா மின் சாரம் வழங்க, ஜெனரேட்டர் வசதி; தீயணைப்பு வசதி செய்திருக்க வேண்டும் என்று, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

இடைத்தேர்தல் நடக்க உள்ள, நான்கு சட்ட சபை தொகுதிகளுக்கு, 13 கம்பெனி துணை ராணுவ வீரர்கள், இன்று வர உள்ளனர். அவர்கள், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, தமிழகத்தில் இருப்பர்.இவ்வாறு, சத்யபிரதா சாஹு கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-ஏப்-201911:27:31 IST Report Abuse

D.Ambujavalliஅடுக்கு, அண்டா, குண்டா என்றும் எத்தனை காமிராக்கள் என்றும் வியாக்கியானம் பேசி ஆவது என்ன ? அங்கு, அன்று என் காமிராக்கள் செயலிழக்கப்பட்டன, அத்தனை பாதுகாவலும் முறியடிக்கப்பட்டது என்பதற்கு எந்த விளக்கமும் ஒழுங்காக இல்லை அந்த மூன்று மணி நேரத்தில் அவர்கள் ஸ்மார்ட்டாக என்னென்ன செய்தார்களோ என்று எதிர்க்கட்சியினரும், ஓட்டளித்த அப்பாவி வாக்காளரும் சந்தேகப்படுவதை மாற்ற முடியுமா? அந்த மையத்தில் இருக்கும் மிஷின்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் ரிசல்ட் டை யாரும் நம்ப மாட்டார்கள்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-ஏப்-201908:50:48 IST Report Abuse

Srinivasan Kannaiyaமதுரை நிகழ்வு இதை பொய் என்று ஆகிவிட்டதே... எல்லாமே சம்பூரணத்திற்க்கே வெளிச்சம்

Rate this:
Manian - Chennai,இந்தியா
26-ஏப்-201905:14:14 IST Report Abuse

Manianஅதெல்லாம் ராவிலே காவல் பயலுக, கேமிரா தூங்கும்போது , கருப்பு துணி முக்காடு, பர்தா போட்டு மூடிக்கிட்டு போவோமில்லே எங்காளுக்கா எப்படி திருடனும்னு சொல்லித்தரநும். விஞ்ஞான திருடர்கள் அடியாட்கள் நாங்க. பிரியாணி, குவார்டரு ஒரு பிடி பிடிக்க வச்சு.தூக்க வெஷ பொகைபோட்டு எல்லா போஈசு பயலுகளையமே ஒறங்க வெச்சுபோடுவோமே. மாமூலும் கொடுத்தாச்சே.நேர்மைனா அது எங்க கட்ச்சிக்கே அவமானம் இல்லே- திருடர் கழக மேற்பார்வையாளர் சாத்தபுரம் மால்மருகனார்(பழய கேடி சுப்பிரமணியன்)

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X