அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வெற்றியை களவாட முயல்வர்
அ.தி.மு.க., மீது ஸ்டாலின் புகார்

சென்னை, 'நான்கு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க., வெற்றியை, களவாட முயற்சிப்பர்' என, அ.தி.மு.க., மீது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க.,  ஸ்டாலின் புகார்


அவரது அறிக்கை:கடல் போன்ற லோக்சபா தேர்தல் களத்தையும், ஆறு போன்ற, 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல்

களத்தையும் எதிர்கொண்டு, கடந்து விட்டோம். வாய்க்கால் போன்ற, நான்கு சட்டசபை தொகுதி களுக் கான இடைத்தேர்தல் களத்தில், கவனத்துட னும், எச்சரிக்கையுடனும், தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்.

கடலிலும், ஆற்றிலும் மோசடி செய்ய முனைந்தவர் கள், வாய்க்காலின் இயல்பான போக்கை வழிமறித்து, திசை மாற்றிட எளிதாக முயற்சிப்பர்.
திருப்பரங்குன்றம்,ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் ஆகிய நான்கு தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில், மாநில அமைச்சர்களும், ஆளுங் கட்சி நிர்வாகிகளும் முகாமிடுவர்.


தங்களிடம் உள்ள ஆட்சியின் கடைசி நேர அதிகார

Advertisement

ப லத்தை, அடாவடியாகச் செலுத்தி, தி.மு.க., பெறஇருக்கும் வெற்றியைக் களவாடுவதில், முனைப்பு காட்டுவர். அதை முறியடித்திடும் வகையில், தி.மு.க.,வினர் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும்.இவ்வாறு, கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
27-ஏப்-201907:57:10 IST Report Abuse

Matt Pகடலிலும், ஆற்றிலும் மோசடி செய்ய முனைந்தவர் கள், வாய்க்காலின் இயல்பான போக்கை வழிமறித்து, திசை மாற்றிட எளிதாக முயற்சிப்பர். ..ஆளு உஷாரா ஆயிட்டார் போலிருக்கு. ..காசு எல்லாம் இனிமேல் இறக்க வேண்டாம் என்று நினைத்து விட்டார். இப்போ இவர் ஒரு சைவ பூனை.

Rate this:
S.kausalya - Chennai,இந்தியா
26-ஏப்-201920:14:49 IST Report Abuse

S.kausalyaஉங்களின் கடந்த கால திமுக ஆட்சியை போன்ற ஆட்சியை கொடுப்போம் என சொல்ல முடியுமா? உங்களுக்கே நா. கூ சும் இல்லையா? அப்புறம் என்ன பேச்சு?

Rate this:
s vinayak - chennai,இந்தியா
26-ஏப்-201919:41:47 IST Report Abuse

s vinayakஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இதுதான். தோல்விக்கான காரணம் இப்போதே தயார்.

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X