மம்தா, நவீன் தூக்கத்தை கெடுத்த மோடி

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (13)
Advertisement
மம்தா, நவீன் தூக்கத்தை கெடுத்த மோடி

புதுடில்லி: பிரதமர் கனவில் இருக்கும் வங்கத்தின் மம்தா பானர்ஜிக்கும் ஒடிஷாவின் நவீனுக்கும் மோடியின் பிரசாரம் துாக்கத்தை கெடுத்து வருகிறது.

சமீபத்தில் ஒரு டிவி பேட்டியில் பேசிய பிரதமர் மோடி, ‛‛பிரதமர் பதவியை ஏலத்தில் விட்டால் அதை எடுக்கும் முதல் ஆளாக மம்தா இருப்பார். ஆனால் பிரதமர் பதவியை ஏலத்தில் விட முடியாது என்பது தான் பிரச்னை'' என்று நையாண்டி செய்திருந்தார்.அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் எனக்கு பரிசாக ஓரிரண்டு குர்தாக்கதள பரிசாக மம்தா அனுப்பி வைப்பார் என்றும் போட்டு உடத்தார். இதன் மூலம், ஒருபுறம் மோடியை விமர்சித்துக்கொண்டே இன்னொரு புறம் நட்பாகவும் இருக்க மம்தா முயற்சி செய்யும் ரகசியம் தெரிய வந்தது.





இது போதாதா மற்ற கட்சிகளுக்கு. காங்.,கும் மார்க்சிஸ்டும், ‛‛மம்தா ரகசியமாக பா.ஜ.,வுடன் தொடர்பு வைத்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு தேவைப்பட்டால் கூட்டணி வைக்கவே இந்த ஏற்பாடு'' என்று கண்டனம் தெரிவித்துள்ளன.மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு அதிக ஆதரவாக இருப்பது அம்மாநில முஸ்லீம்கள். குர்தா ரகசியத்தை மோடி உடைத்ததும், முஸ்லீம்கள் மத்தியில் மம்தா மீது கோபம் ஏற்பட்டுள்ளது.கோபம் அடைந்த மம்தா, ‛மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்குமாறு மத்திய பாதுகாப்பு படையினர் மக்களிடம் ஓட்டு சேகரிக்கின்றனர்'' என்று குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இன்னும் நிரூபிக்கப்படாத இந்த குற்றச்சாட்டு, மம்தா பதட்டத்தையே காட்டுவதாக தெரிகிறது.மேற்கு வங்கத்தில் பா.ஜ., கூட்டங்களுக்கு பெரிய கூட்டம் வராது. ஆனால் சமீபத்தில் அங்கு அமித்ஷா கூட்டங்களுக்கு பெரிய அளவில் கூட்டம் கூடியது. இதுவும் மம்தாவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.பா.ஜ., செல்வாக்கு கூடுகிறதா:2014ல் நாடு முழுவதும் மோடி அலை அடித்தபோதும் மேற்கு வங்கத்தில் எந்த அசைவும் இல்லை. பா.ஜ.,வை முக்கிய எதிரியாகவே மம்தா நினைக்கவில்லை. மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 2ல் மட்டுமே பா.ஜ., வென்றது.ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மோடியும் அமித்ஷாவும் மேற்கு வங்கத்தில் பா.ஜவை வளர்க்க கடுமையாக உழைத்துள்ளனர். எனவே, வட இந்திய மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு சரிவு ஏற்பட்டால் மேற்கு வங்கம், ஒடிஷாவில் கிடைக்கும் வெற்றி கைகொடுக்கும் என்று பா.ஜ., நினைக்கிறது.வங்கத்தில் ஏற்கனவே நடந்தி பஞ்சாயத்து தேர்தலில், பா.ஜ., கட்சியினரை ஓட்டுச் சாவடிக்கே செல்வதற்கு திரிணாமுல் காங்., கட்சியினர் விடவில்லை. லோக்சபா தேர்தல், மத்திய பாதுகாப்பு படையின் கண்காணிப்பில் நடப்பதாலும் ஓட்டுப்பதிவு அதிகம் நடந்துள்ளதாலும் கவலையில் இருக்கிறார் மம்தா.ஒடிஷா நிலை:ஒடிஷாவில் லோக்சபாவுடன் சட்டசபை தேர்தலும் சேர்ந்து நடக்கிறது. 19 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நவீன் பட் நாயக் 5வது முறையாக முதல்வர் ஆக பாடுபடுகிறார். 2014 தேர்தலில் மொத்தம் உள்ள 21 லோக்சபா தொகுதிகளில் 20ல் வென்றால் நவீன். ஒரே ஒரு தொகுதியில் பா.ஜ., வென்றது.நவீன் மீதும் பா.ஜ., ஒரு கண் வைத்துள்ளது. சமீபத்தில் மோடி கூறுகையில், ‛‛பா.ஜ., தொண்டர்கள் மீது ஒடிஷா ஆளுங்கட்சியினர் தாக்குதல் நடத்தினால் அதை நவீன் பட்நாயக் பொறுத்துக்கொள்ள மாட்டார்'' என்றார். இதை வைத்து பார்க்கும்போது ஒடிஷாவிலும் துண்டு போட்டு வைத்துவிட்டார் மோடி என்பது தெளிவாகிறது.ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நவீன், ஆளுங்கட்சிக்கு எதிராக அலை அடிக்குமோ என்ற அச்சத்திலும் இருக்கிறார்.


Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathy - Bangalore,இந்தியா
26-ஏப்-201912:51:06 IST Report Abuse
Ganapathy ஒரே தமாஷ். நாட்லே திருடங்க இறங்கி தெருல நடந்ததா,உறக்கம் போகும். இங்கே காவல்காரன் அல்லவோ இறங்கி நடக்கிறார் ?
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
26-ஏப்-201913:52:46 IST Report Abuse
Chowkidar NandaIndiaநல்லவர்களுக்கு காவல்காரர் இருக்கிறார் என்ற நினைப்பில் எவ்வித கவலையுமின்றி நல்லா உறக்கம் வருவதும் அதேசமயம் கொள்ளைக்காரர்களுக்கும், ஜாமீன் திருடர்களுக்கும் ஐயோ, காவல்காரர் இருக்கிறாரே என்ற நினைப்பிலேயே உறக்கம் வர மறுப்பதும் இயற்கைதானே....
Rate this:
Share this comment
Cancel
ramakrishnan - chennai,இந்தியா
26-ஏப்-201912:18:07 IST Report Abuse
ramakrishnan தேவகவுடா வை மறந்துட்டீங்களே .
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26-ஏப்-201912:05:19 IST Report Abuse
Nallavan Nallavan அறியாப் பருவத்து சிறுவயதுத் திருமணம் ..... ஆகையால் முமைதா பேகம் இன்னும் செல்விதான் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X