அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., சொத்து விபரங்கள்,ஐகோர்ட்,சமர்ப்பிப்பு

சென்னை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து விபரங்களை, வருமான வரித் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதன்படி, ஜெ.,க்கு, 16 கோடி ரூபாய்க்கு அசையும், அசையா சொத்துகள்; 40 கோடி ரூபாய்க்கு, நிறுவனங்களில் பங்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், 16.75 கோடி ரூபாய் வரி பாக்கி காரணமாக, ஜெ.,வின் போயஸ் கார்டன் இல்லம் உள்ளிட்ட, நான்கு சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளதும், வருமான வரித் துறை அளித்த துறை ரீதியான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் சென்னை மாவட்ட, ஜெ., பேரவை துணைச் செயலர், புகழேந்தி மற்றும் ஜானகிராமன் தாக்கல் செய்த மனுவில், 'ஜெ.,வின் சொத்து மதிப்பு, 913.41 கோடி ரூபாய் அளவில் இருக்கும்; மூன்றாம் நபர் வசம் உள்ள இந்த சொத்துகளை, முறையாக நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், சரவணன் அடங்கிய,

'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. நிர்வாகியாக நியமிக்க கோரி, ஜெ.,வின் சகோதரர் மகன் தீபக் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜெ., சொத்து மற்றும் கடன் விபரங்களை தெரிவிக்கும் படி, வருமான வரித் துறைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டுஇருந்தனர்.
இதையடுத்து வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. வருமான வரித் துறை சார்பில், வழக்கறிஞர், ஏ.பி.சீனிவாஸ் தாக்கல் செய்த அறிக்கை:வருமான வரித் துறையிடம், ௨௦௧௬ - ௧௭ல், ஜெ., தரப்பில் தாக்கல் செய்த கணக்கில், சென்னை, அண்ணாசாலையில், பார்சன் காம்ப்ளக்சில் தரை தளம், போயஸ் தோட்ட இல்லம், செயின்ட்

மேரிஸ் சாலையில் உள்ள சொத்து, ஐதராபாத், ஸ்ரீநகர் காலனியில் உள்ள சொத்து என, அசையா சொத்துக்கள் காட்டப்பட்டுள்ளன.
நிலம், கட்டடம் என, அசையா சொத்துக்களின் மதிப்பு, 5.30 கோடி ரூபாய்; வங்கி டிபாசிட் தொகை, 10.47 கோடி ரூபாய்; நகைகள் மற்றும் தங்கத்தின் மதிப்பு, 12.50 லட்சம் ரூபாய், கலைப் பொருட்கள், வாகனங்களின் மதிப்பு, 42.25௫ லட்சம் ரூபாய் என, மொத்தம், 16.37 கோடி ரூபாய் காட்டப்பட்டுள்ளது.
கோடநாடு எஸ்டேட், ராயல் வேலி, ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ் நிறுவனங்களில், தலா, 50 சதவீதம் லாபம் என,

மூலதன இருப்பு தொகையாக, 40.03 கோடி ரூபாய் என, காட்டப்பட்டு உள்ளது.கடந்த,1990 - 91ல் இருந்து, 2011 -12 வரை, வட்டியுடன் சேர்த்து, செல்வ வரி பாக்கியாக, 10.12 கோடி ரூபாய்; 2005 - 06௬ல் இருந்து, 2011 - 12 வரை, வருமான வரி பாக்கியாக, 6.62 கோடி ரூபாய் உள்ளது.
இதற்காக, போயஸ் தோட்ட இல்லம்,அண்ணாசாலையில், பார்சன் காம்ப்ளக்சில் தரை தளம், ஐதராபாத்தில் உள்ள வீடு ஆகிய அசையா சொத்துக்கள், 2007லும், சென்னை, செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள சொத்து, 2013லும் முடக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நந்தகுமார், ''ஜெ., சொத்துகளை நிர்வகிக்க, தனிநபர் கோர முடியாது,'' என்றார். அதற்கு, தீபக் தரப்பில், ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, வழக்கின் விசாரணையை, ஜூன், 6க்கு, நீதிபதிகள்,எம்.எம்.சுந்தரேஷ், சரவணன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், தள்ளி வைத்தது.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-ஏப்-201915:02:58 IST Report Abuse

Pugazh Vகாந்தி கணக்கு என்பது "கணக்கில் வராதது" என்ற அர்த்தம் தான்.. எப்படியெனில், "முன்பு ஒருமுறை, வ.உ.சி.யிடம் கொடுக்கச் சொல்லி ஒரு தொகையை சுபாஷ் சந்திர போஸ் (அல்லது சு.ச.போஸிடம் கொடுக்க சொல்லி வ.உ.சி ) ஒரு தொகையை காந்தி யிடம் கொடுத்து அனுப்பி னார். ஆனால் அந்த தொகை சேர வேண்டிய வரிடம் சேரவில்லை." அன்று முதல் இந்த சொல்லாடல் வந்து விட்டது. என்று எங்கே யோ படித்தேன்.

Rate this:
skv - Bangalore,இந்தியா
26-ஏப்-201914:49:20 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>அந்தம்மா அப்போலாலே இருந்தாங்களே சுய நினைவே இல்லாதைக்கு அப்போது பல வரை கண்டெய்னர்களிலே அள்ளிண்டுபோனானுகளே தினகரன் சசி நடராசன் என்று எல்லோரும் அதெல்லாம் எங்கேபோச்சு என்று ஏவாளும் கேக்கவே இல்லீயே மார்க்கெட் போயிட்டுதான் அந்தம்மா அரசியலிலே நுழைந்தது இது உலகறிஞ்ச உண்மை இருந்தது என்றால் சந்தியாவால் வாங்கப்பட்ட போயஸ் வீடு ஹைதராபாத் திராக்ஷை தோட்டம்னு சொல்லுவாங்க பதவிக்கு வந்துட்டும் நெறைய சேர்த்தாங்க என்றும் ரூமேற் உண்டு எல்லாம் சசியும் அவ புருசன் நும் முழுங்கப் பார்த்தாங்க என்பதும் உண்மை அந்தம்மாவையே குற்றவாளியாக்கி சிறைக்கும் போகவாச்சானுகளே இந்த கூட்டம் இப்போது இந்த தினகரன் நேர்மையாட்டாம் வேஷம்போடுறான் கொள்ளைக்காரன்

Rate this:
26-ஏப்-201913:30:02 IST Report Abuse

ருத்ராமுதல்வராக இருந்து மறைந்த காரணம் வேண்டும். இறைவனிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் நம்பிக்கையுடன்.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X