மது ஆசை காட்டும்; 'மாஜி' முதல்வர் மஞ்சி!

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (14)
Advertisement
 மது ஆசை காட்டும்; 'மாஜி' முதல்வர் மஞ்சி!

பீஹார் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சித் தலைவருமான, ஜிதன்ராம் மஞ்சி, தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்கும் போது, மக்களுக்கு மதுபான ஆசையை ஊட்டி வருகிறார். முதல்வர் நிதீஷ்குமார் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு, மாநிலத்தில் மது விலக்கு அமல்படுத்தியுள்ளார்.ஆனால், மஞ்சி பிரசாரம் செய்யும் போது, 'லோக்சபா தேர்தல் முடிந்ததும், மாநிலத்தில் பழையபடி, மதுபானக் கடைகள் திறக்கப்படும்' என்கிறார்.லோக்சபா தேர்தலில் வெற்றி, தோல்வி, மாநிலத்தில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தும் என, யாராவது விபரம் தெரிந்தவர்கள் கேட்டால், அதற்கும் பதில் சொல்கிறார்.





'மத்தியில், மோடி ஆட்சி அகற்றப்பட்டதும், மாநிலத்தில் நிதீஷ்குமார் அரசும் நீக்கப்படும். அதன் பிறகு, எங்கள் ஆட்சியில் முன்னர் இருந்தது போல, மதுவிலக்கு நீக்கப்படும்' என்கிறார்.அவரின் பேச்சை வெகுவாக ரசிக்கும் மக்கள், மது அரக்கனின் கொடுமையிலிருந்து நீங்கியதை எண்ணி, எங்கள் ஓட்டு, நிதீஷ்குமாருக்கே என, 'சேம் சைட் கோல்' அடிக்கின்றனர்.எவ்வளவு பேசியும், இந்த மக்களை திருத்த முடியலையே என, விரக்தியின் விழிம்புக்கே சில நேரங்களில் சென்று விடுகிறார், மஞ்சி.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
26-ஏப்-201915:30:35 IST Report Abuse
Amirthalingam Sinniah அடுத்தவர்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் இந்த ஆசாமி நாட்டுக்கு தேவைதானா?
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
26-ஏப்-201911:52:15 IST Report Abuse
S.Ganesan இவனை எல்லாம் அடித்து துரத்த வேண்டும். இதே போல் இங்கே திமுக வையும்.
Rate this:
Share this comment
Cancel
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஏப்-201910:26:43 IST Report Abuse
Thiagu இதெல்லாம் கட்டுமரம் 50 வருசத்துக்கு முன்னாடியே பன்னதப்பா. புதுசா எதாவது சொல்லு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X