பீஹாரின், கால்நடை ஊழல் கதாநாயகன், லாலு பிரசாத் யாதவின் இளைய மகன், தேஜஸ்வி, தந்தை துவக்கிய, ஆர்.ஜே.டி., எனப்படும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை கவனித்து வருகிறார்.அந்த மாநிலத்தை ஆளும், முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக அரசியல் செய்து வரும் அவர், லோக்சபா தேர்தலில், பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சாதாரண மக்களை ஈர்க்கும் வகையில், அவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் பிரசாரம் செய்வதை, தந்தை லாலுவிடம் கற்றுக் கொண்டார் போலும். 'பா.ஜ.,வுக்கு, ஒரு மாதா தான். ஆனால், எங்களுக்கு இரண்டு மாதாக்கள். ஒன்று, பாரத மாதா; மற்றொன்று, இட ஒதுக்கீடு மாதா. இந்த இரண்டு மாதாக்களும் காப்பாற்றப்பட, எங்கள் வேட்பாளர்களுக்கு ஓட்டளியுங்கள்' என, தெளிவாக பேசி, ஓட்டு சேகரிக்கிறார்.
இப்படித் தான் அவரின் தந்தை லாலுவும், கடினமான எந்த வார்த்தையும் இல்லாமல், சாதாரணமானவர்கள் மனதில் பதியும் படி பேசுவதில் வல்லவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE