தேர்வில் தோல்வி: 16 மாணவர்கள் தற்கொலை

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (11)
Advertisement
Telangana,students,suicide,தெலுங்கானா,தேர்வில் தோல்வி,மாணவர்கள்,தற்கொலை

ஐதராபாத்: தெலுங்கானாவில் இன்டர்மீடியட் தேர்வில் தோல்வியடைந்ததால் 16 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதாக தவகல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானாவில், டி.பி.ஐ.இ. எனப்படும் தெலுங்கானா இன்டர்மீடியட் கல்வி வாரியத்தின் சார்பில் இன்டர்மீடியட் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடந்தன. மாநிலம் முழுவதும் 9.74 லட்சம் பேர் தேர்வு எழுதினர். கடந்த 18-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 3.28 லட்சம் பேர் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது.



தோல்வி விரக்தியால் மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 16 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் சந்திரசேகரராவ் விசாரணை நடத்திட உத்தரவிட்டுள்ளார். அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஏப்-201909:45:39 IST Report Abuse
ருத்ரா தோல்வி என்பது just slip of the step. சாதனை வேறு வழியில் கூட தொடரலாம். அதற்கு மாணவர்கள் மன உறுதியுடன் உயருடன் இருக்க வேண்டும் அல்லவா. பெற்றோர்கள் உறவினர் முன், அக்கம் பக்கத்தார் முன் நண்பர்கள் முன் ஏளனமாக மனம் காயப் படுவது போல் பேசாதீர்கள். ஆறுதலாக தைரியம் சொன்னால் இனிமேலாவது தற்கொலை களை தவிர்க்கலாம். தற்கொலை தீர்வல்ல.
Rate this:
Share this comment
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
26-ஏப்-201914:16:24 IST Report Abuse
Dinesh Pandianஇன்டெர் முதல் வருடம் 98 இரண்டாம் வருடம் 0 இப்படி மார்க் போட்ருக்கானுங்க...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-ஏப்-201909:13:40 IST Report Abuse
Natarajan Ramanathan நந்தினி திவ்ய பாரதி அவர்களே, எட்டு அடி கிணற்றை தாண்ட நான்கு அடி தாண்டினால் உள்ளே தான் விழவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-ஏப்-201909:09:07 IST Report Abuse
Natarajan Ramanathan ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கல்வி தரம் மிக அதிகம். தமிழ்நாடு சமச்சீர் கல்வி திட்டத்தில் +2 படிக்கும் மாணவனால் கூட ஆந்திராவின் எட்டாம் வகுப்பு கணக்கு பாடத்தை பாஸ் பண்ண முடியாது. அதனால்தான் IITல் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
Rate this:
Share this comment
Jay Forme - MotorCity,இந்தியா
30-ஏப்-201910:34:13 IST Report Abuse
Jay Formeஅது உண்மையில்லை, அவர்கள் 7 வகுப்பிலிருந்தே ஐஐடி கோச்சிங் போகிறார்கள், அதனாலதான் இந்த சக்ஸஸ். கல்வி தரம் எல்லாம் ஒன்னு தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X