'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி: 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 'பியர்ல் சிட்பண்ட்' மோசடியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும்' என அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






'பியர்ல் அக்ரோடெக் கார்ப்பரேஷன்' என்ற தனியார் நிதி நிறுவனம் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிறுவனம் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.





இந்நிலையில் காங். சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'பியர்ல் சிட்பண்ட்' மோசடியால் நாடு முழுவதும் 5.85 கோடி குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியில் காங். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மூன்று மாதங்களுக்குள் அவர்கள் முதலீடுகளை வட்டியுடன் திரும்பப் பெற்றுத் தர கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
26-ஏப்-201916:33:45 IST Report Abuse
Endrum Indian 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி ???அப்போ அவனுங்களை ஒரு மண்ணும் செய்ய முடியாது , அதன் பின்னே நிச்சயமாக கேடு கெட்ட அரசியல்வாதி நிச்சயமாக இருப்பான். ஏதோ 5 கோடி பத்து கோடின்னா சின்ன ஆளுங்களாக இருப்பாங்க , ரூ . 50,000 கோடி ன்ன நிச்சயம் முஸ்லீம் நேரு இத்தாலிய பப்பு தி கிரேட் காங்கிரஸ் ஆளுங்க தான்???அவங்க எப்படி அவங்க மேலேயே நடவடிக்கை எடுப்பாங்க???இது வெறும் வெத்து வெட்டு வாக்கியம்???
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
26-ஏப்-201915:49:53 IST Report Abuse
Rengaraj "மத்தியில் காங். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மூன்று மாதங்களுக்குள் அவர்கள் முதலீடுகளை வட்டியுடன் திரும்பப் பெற்றுத் தர கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்" - நடவடிக்கை மட்டுந்தான் எடுப்பார்கள். அதாவது கமிஷன் அமைப்பார்கள் அல்லது யார் மீதாவது வழக்கு தொடுப்பார்கள் அல்லது ஏதாவது புது சட்டம் போடுவார்கள். பணத்தை வாங்கி தருகிறோம் என்று உறுதியாக சொல்லவில்லை. ஏழைகளுக்கு மாதம் ஆறாயிரம் வங்கிக்கணக்கில் போடுவோம் என்று சொல்கிறமாதிரி இதில் ஏன் சொல்ல முடியவில்லை.?.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
26-ஏப்-201913:08:40 IST Report Abuse
bal முதலில் 1984 கொலைகளுக்கு பதில் கொடுங்கள்...சுவிஸ் பேங்க் பணத்தை திருப்பி கொடுங்கள்...இப்போ கூட கமல் நாத் 2 கோடி செலவு பண்ணி எதுக்கு போனார்... ராகுலும் அம்மா சோனியாவும் ஒரு ஊழலில் ஜாமினில் இருக்கிறீர்களே... அந்த பணத்தை திருப்பி விடுங்கள்...பின்னர் வாக்குறுதி கொடுக்கலாம்...ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கரில் வாக்குறுதி என்ன ஆச்சு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X