பொது செய்தி

இந்தியா

வங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு முதலிடம்

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (30)
Advertisement

மும்பை: கடந்த, 2018 ஜூன் வரையிலான ஓராண்டு காலத்தில், வங்கி குறைதீர்ப்பு மையங்களில், 1.63 லட்சம் புகார்கள் குவிந்துள்ளன. இது, முந்தைய ஆண்டை விட, 24 சதவீதம் அதிகம். அவற்றில், 96 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


புகார்களில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இவ்வங்கி மீது, 47ஆயிரம் புகார்கள் குவிந்தன. அடுத்து, எச்.டி.எப்.சி., வங்கி, 12 ஆயிரம் புகார்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, சிட்டி பேங்க் மீது, 1,450 புகார்கள் கூறப்பட்டுள்ளன.

வங்கிகள், விதிகளின்படி வெளிப்படையாக நடந்து கொள்வதில்லை என, 22.1 சதவீத புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, ஏ.டி.எம்., மற்றும் டெபிட் கார்டு தொடர்பாக, 15.1 சதவீதம்; கிரெடிட் கார்டு 7.7 சதவீதம்; வலைதளம் வாயிலான வங்கிச் சேவை குறித்து, 5.2 சதவீத புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஓய்வூதியம், முன்கூட்டியே தெரிவிக்காமல் சேவைக் கட்டணம் வசூலிப்பது, கடன், டெபாசிட், நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ள முகவர்கள், வாராக் கடன் மீட்பு நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல்களை அளிப்பது போன்றவை தொடர்பாக, தலா, 5 சதவீத புகார்கள் வந்துள்ளன.

மத்தியஸ்தம் மூலம் தீர்வு காணப்பட்ட புகார், 42.4 சதவீதத்தில் இருந்து, 65.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. வங்கி குறைதீர்ப்பாயங்கள், வாடிக்கையாளர்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கிறது. இதனால், வங்கிகள் மீதான புகார் பரிசீலனை செலவினங்கள் குறைந்து வருகின்றன. ஒரு புகாரை பரிசீலிக்க ஆகும் சராசரி செலவு, 3,626 ரூபாயில் இருந்து, 3,504 ரூபாயாக குறைந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumarkv - chennai,இந்தியா
27-ஏப்-201914:06:24 IST Report Abuse
kumarkv I found state Bank Of Hyderabed, Usman Road, T.Nagar, Chennai 600017 is an excellent branch. All the staff are very cooperative gives a personal touch. The culture was established by then branch Manager (acting) Mr. Kalyan Mukarjee, where ever he is now, I am conveying my best wishes to him. He was very active, made the branch customer friendly. More than 35 years I am an account in this branch and no complaints.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-ஏப்-201914:48:48 IST Report Abuse
Natarajan Ramanathan மொத்தம் 25,000 கிளைகள். எந்த வசதியும் இல்லாத சிறு கிராமத்தில்கூட கிளைகள். லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள். உண்மையை சொல்லுங்கள். வங்கி ஊழியர்கள் மாதிரி சரியான நேரத்துக்கு அலுவலகம் வரும் வேறு ஒரே ஒரு அரசு அலுவலகத்தையாவது கூற முடியுமா? மூத்திர நாற்றமும் வெற்றிலை கறையும் இல்லாத அரசு அலுவலகம் இருக்கிறதா? (எனக்கு SBIல் Account இல்லை)
Rate this:
Share this comment
Cancel
kumarkv - chennai,இந்தியா
26-ஏப்-201914:28:58 IST Report Abuse
kumarkv ICICI Prudential is very Company to invest money . They are number one cheats . They swallow customer's money, such a ruthless, treacherous bunch of people. Public should invest in third rate companies like ICICI prudential. There is no single point contact and nobody takes the responsibility for your money. They may to run pillar to post and gain time to blackmail you. Please publish this message. I take full responsibility for my message.
Rate this:
Share this comment
kumarkv - chennai,இந்தியா
27-ஏப்-201913:51:56 IST Report Abuse
kumarkvICICI Prudential is very bad Company to invest money ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X