பொது செய்தி

இந்தியா

'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு முறைகேட்டை தடுக்க அறிமுகம்

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (38)
Advertisement

புதுடில்லி: சரக்கு போக்குவரத்தில்,வரி ஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க, 'இ - வே பில்' திட்டத்தில் சில மாற்றங்களை, மத்திய நிதியமைச்சகம் செய்துள்ளது.






ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் பதிவு செய்த வணிக நிறுவனங்கள், வேறு மாநிலங்களுக்கு அனுப்பும், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மேற்பட்ட சரக்கிற்கு, 'இ - வே பில்' எனப்படும் மின் வழிச்சீட்டு அவசியமாகும். சரக்கு கொண்டு செல்லும் போது, வரி அதிகாரிகள் ஆய்வு செய்தால், இந்த சீட்டை காட்ட வேண்டும்.


ஓட்டை:


வரி ஏய்ப்பை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த மின்வழிச் சீட்டு திட்டத்திலும், சில ஓட்டைகள் மூலம், வரி செலுத்தாமல் பல்வேறு முறைகேடுகள் நடப்பது, தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு, ஏப்., - டிசம்பர் வரையிலான, ஒன்பது மாதங்களில், 15 ஆயிரத்து, 278 கோடி ரூபாய் அளவிற்கு, ஜி.எஸ்.டி., ஏய்ப்பு, விதிமீறல் போன்றவை நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, தொடர்பாக, 3,626 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய முறைகேடுகளை தடுக்க, மின்வழிச் சீட்டு நடைமுறையில் சில மாற்றங்களை, மத்திய நிதியமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, இனி,'பின்கோடு' எனப்படும், அஞ்சலக குறியீடு அடிப்படையில், சரக்கு போக்குவரத்து நடைபெறும் துாரம், தன்னிச்சையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சரக்கு அனுப்புவோர், அதிகபட்சமாக, 10 சதவீத துாரத்தை மட்டுமே, மின்வழிச் சீட்டில் குறிப்பிட முடியும். உதாரணமாக, அஞ்சலக குறியீடு அடிப்படையில், 655 கி.மீ., துாரத்திற்கு சரக்கு போக்குவரத்து நடைபெற்றால், கூடுதலாக, 65 கி.மீ., துாரம் மட்டுமே பதிவு செய்ய முடியும். இதன்படி, அதிகபட்சமாக, 720 கி.மீ., வரை தான், மின்வழிச் சீட்டு செல்லுபடியாகும்.





இதனால், துார அடிப்படையில் நடைபெறும் முறைகேடுகள் முடிவுக்கு வரும். மேலும், 'இன்வாய்ஸ்' எனப்படும், விலைப்பட்டியல் மூலம், பல மின்வழிச் சீட்டுகளை உருவாக்கும் நடைமுறையும் முடிவுக்கு வருகிறது. இனி, ஒரு விலைப் பட்டியல் எண் மூலம், மின் வழிச்சீட்டு உருவாக்கப்பட்டால், அதே எண்ணில் மீண்டும் மின் வழிச் சீட்டை உருவாக்க முடியாது.


முற்றுப்புள்ளி:


சரக்கு அனுப்பும் நிறுவனம், சரக்கு பெறும் நிறுவனம், சரக்கை எடுத்துச் செல்லும் சரக்கு போக்குவரத்து நிறுவனம் ஆகியவை, ஒரு விலைப்பட்டியல் எண் மூலம், பல மின்வழிச் சீட்டுகளை உருவாக்குவது சாத்தியமில்லை என்பதால், இவ்வழியிலான முறைகேட்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சரக்கு போக்குவரத்து நடைபெறும் போது தாமதம் ஏற்படும்பட்சத்தில், மின்வழிச் சீட்டு காலாவதி நேரத்தை நீட்டிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மின்வழிச் சீட்டின் காலாவதி நேரம் குறித்த தகவல்களை அறியும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மின்வழிச் சீட்டில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் சரக்கு சென்றடைவதை, உறுதி செய்து கொள்ள முடியும். இத்தகைய மாற்றங்கள், மின்வழிச் சீட்டு நடைமுறையில், வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடுகளை குறைக்க உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டுப்பாடு:


ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல், தொடர்ந்து இரண்டு மாதங்கள் நிலுவை இருந்தால், 'இ - வே' பில் பெற முடியாது என்ற புதிய கட்டுப்பாடு ஜூனில் நடைமுறைக்கு வர உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
27-ஏப்-201916:03:52 IST Report Abuse
Ramamoorthy P ரொக்கத்தில் வியாபாரம் செய்கின்றவன் பில் டு பில் ஐ .டி .சி எடுக்க முடியாது அவர்கள் தங்களாகவே கம்பவுண்டிங் டாக்ஸ் முறைக்கு சென்று விடுவார்கள் அது கூட அவர்கள் காண்பிக்கும் சரக்கு இருப்பு விபரம் கண்காணிக்கப்பட வேண்டியதே
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
26-ஏப்-201916:21:21 IST Report Abuse
இந்தியன் kumar முன்பு நல்லவர்கள் ஒழுங்காய் வரி கட்டி கொண்டு இருந்தார்கள் வரி கட்டாமல் விற்பனை செய்பவர்களுடன் போட்டி போட முடியாமல் பின் தங்கி இருந்தனர் . ஆனால் இப்போது நிலைமை வேறு வரி கட்டாமல் இருந்தவனுக்கு இப்போது வரி கட்டி தான் ஆகவேண்டும் என்பதால் ரொம்ப வலிக்கிறது , நாமும் வாழவேண்டும் நாடும் வாழவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
26-ஏப்-201916:16:58 IST Report Abuse
இந்தியன் kumar இது வரை வரி கட்டாதவர்களும் வரி கட்டுகிறார்கள் இது அரசுக்கு கிடைத்த வெற்றி , முறைகேடாக தொழில் செய்யமுடியாது நிரூபிக்கப்பட்டுள்ளது,இன்னும் நிறைய சீர் திருத்தங்கள் வர வேண்டும். அதட்கு இந்த ஆட்சி மீண்டும் தொடர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X