இலங்கை பலி எண்ணிக்கை 253

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (29)
Advertisement

கொழும்பு : இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 என ஏப்., 24 அன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இது 253 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்கு உளவுத்துறையின் மோசமான செயல்பாடே காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. 10 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை, தாக்குதல் குறித்தும் தெளிவான விபரங்களுடன் எச்சரிக்கை விடுத்தும் இலங்கை நிர்வாகம் அதை கண்டுகொள்ளாதது பலரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அறிவிப்பிலும் இலங்கை அரசு தவறு செய்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


ஏப்.,24 அன்று தாக்குதலில் 359 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 253 என புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், உயிரிழந்தவர்களில் பலரின் உடல்கள் மோசமாக சிதைவடைந்துள்ளதால் இரண்டு முறை எண்ணப்பட்டுள்ளது. அனைத்து பிரேத பரிசோதனைகளும் முடிவடைந்ததும் டிஎன்ஏ மாதிரிகளை ஒப்பிட்டு பார்த்து, சரிபார்க்கப்பட்டதால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இருப்பினும் உயிரிழந்தவர்களில் உள்நாட்டினர் எத்தனை பேர், வெளிநாட்டினர் எத்தனை பேர் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. அதே சமயம், 40 வெளிநாட்டினர் உயிரிழந்திருப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
26-ஏப்-201916:28:28 IST Report Abuse
Endrum Indian அச்சு அசலாக ஸ்ரீ லங்காவில் நடிப்பது / நடப்பது முஸ்லீம் நேரு இத்தாலிய பப்பு தி கிரேட் காங்கிரஸ் அரசு தான், அதே பொய் வழியில் செல்கின்றது .
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
26-ஏப்-201914:04:54 IST Report Abuse
தாண்டவக்கோன் உலக நன்மை/அமைதி கருதி முஸ்லீம்கள் தீவிரவாதத்தை உடனே கைவிடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-ஏப்-201913:54:09 IST Report Abuse
அசோக்ராஜ் ஜோசப் விஜய்யின் துப்பாக்கி சினிமா ஒரு வரலாற்று ஆவணம் மாதிரி ஆகிவிட்டது. பல நடுநிலை சோணகிரிகளை விழிப்படைய வைத்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X