ஆட்சிக்கு ஆதரவான அலை: மோடி

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (29)
Advertisement

வாரணாசி : நாடு முழுவதும் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுவதாக பிரதமர் மோடி பேசி உள்ளார். வாரணாசியில் தொகுதியில் இன்று (ஏப்.26) வேட்புமனு தாக்கல் செய்யும் முன் கட்சி தொண்டர்களிடையே மோடி பேசினார்.






அப்போது அவர், முதல் முறையாக நாடு முழுவதும் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது. காஷ்மீர் முதல் குமரி வரை, காசி காட் முதல் போர்பந்தர் வரை நாடு முழுவதிலும் உள்ள மக்கள், "மோடி ஆட்சி, மீண்டும் வேண்டும்" என்கிறார்கள். நல்லாட்சிக்காக நேர்மையுடன் கடினமாக உழைத்துள்ளோம். நான் வெற்றி பெறுகிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை. ஜனநாயகம் வெல்ல வேண்டும். வெயில் சுட்டெரிக்கும் மே மாதத்தில், அனைத்தையும் உடைத்தெறிந்து ஓட்டுப்பதிவில் புதிய சாதனை படைத்து உலகிற்கு காட்டுவோம்.





முந்தைய தேர்தல்களின் அனைத்து சாதனைகளையும் முறியடிப்போம். ஒவ்வொரு 100 ஆண்களின் ஓட்டுக்கு இணையாக 105 பெண்கள் ஓட்டளிக்க வேண்டும். மக்கள் தங்கள் மனங்களில் முடிவு செய்து விட்டார்கள் மோடி ஆட்சி மீண்டும் வர வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். வாரணாசியில் ஏற்கனவே வென்று விட்டோம். அதற்கு நேற்று நடந்த பேரணியே சான்று. இனி நடக்க வேண்டியது ஒன்றுமில்லை. வாரணாசி நேற்றே எனக்கு தனது ஆசியை தந்து விட்டது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27-ஏப்-201902:22:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அது அள்ளிட்டு போற அலை.. பாஜக என்ற குப்பையை மேலே வைத்த அலை போனமுறை இருந்தது. மக்கள் அந்த தவறை நன்றாக உணர்ந்து விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Velu -  ( Posted via: Dinamalar Android App )
27-ஏப்-201902:18:41 IST Report Abuse
Velu baba Ram raheem Asharam Modi ji....
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
26-ஏப்-201919:02:07 IST Report Abuse
Ramakrishnan Natesan கரை ரொம்ப நல்லது ஆனா நுரை தள்ளினா danger தான் பார்த்து
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X