பிரியங்கா போட்டியிடாதது ஏமாற்றம்: ஜெட்லி

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (69)
Advertisement

புதுடில்லி : வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.





வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று வாரணாசி தொகுதியில் அஜய் ராய் போட்டியிட உள்ளதாக காங்., அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் வாரணாசியில் மோடி பிரம்மாண்ட பேரணி ஒன்றை நடத்தினார். பிரியங்கா போட்டியில்லை என காங்., அறிவித்தது தொடர்பாக அருண் ஜெட்லி தனது வலைத்தள பக்கத்தில், "Refuge in Wayanad and a Refuge Away From Varanasi - The Story of a Family Dynasty" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார்.





அதில் அவர், வாரணாசியில் பிரியங்கா போட்டியிடவில்லை என்ற காங்.,ன் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த 2 மாதங்களாக பொது வாழ்க்கையில் இருக்கும் அவரை, வாரிசு என்பது முக்கியமல்ல; இந்தியா மாறிவிட்டது என கூறி வந்தார்கள். பிரியங்காவின் பழங்கதைகள் அழிக்கப்பட்டது. வெற்றிகரமான ஒரு அரசியல் தலைவருக்கு எதிராக புதிதாக அரசியலுக்கு வந்துள்ள வாரிசின் தலை எழுத்தை வாரணாசி எழுதி புதிய இந்தியா உருவாக வாய்ப்பு ஏற்படும் என நம்பினேன். அவர்கள் நாளுக்கு 5 முறை சொல்லிக் கொள்ளும் புதிய இந்தியாவை அவர்களின் படைகள் ஈர்க்க தவறிவிட்டது. அதனால் புதிய இந்தியா அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அனுபவமில்லாத வாரிசுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.





அரசியலுக்கு வந்த சிறிது காலத்திலேயே முதலாவதாக போட்டியிடும் தேர்தலிலேயே மோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியிடுவதை ராகுல், சோனியா மற்றும் பெரும்பாலான மூத்த காங்., தலைவர்கள் விரும்பவில்லை. அதனால் வாரணாசியில் போட்டியிடும் முடிவை பிரியங்காவும் கைவிட்டதாக காங்., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27-ஏப்-201902:14:36 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நீங்க எந்த தொகுதியில் இருந்து ஜெயிச்சி வந்து எம்.பி ஆகி, மந்திரியா இருக்கீங்கன்னு சொல்லுங்க. மொதல்லே நீங்க எங்கேயாவது தேர்தலில் நின்னு மக்களிடம் வாக்குகள் வாங்கி ஜெய்ச்சிட்டு வாங்க. அப்புறம் அடுத்தவங்களை கலாய்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Vetri Vel - chennai,இந்தியா
26-ஏப்-201922:46:09 IST Report Abuse
Vetri Vel ம்ம்ம்...அந்த அளவுக்கு.. பிரியங்கா ஒன்னும் மோசடி பேர்வழி இல்லையே...? 15 லட்ஷம் அசவுண்ட்ல போடுறேன்னு சொல்லி ஏமாத்தினாரா..? இல்ல.. பண மதிப்பிழப்பு னு.. ஜீ எஸ் டி னு சாதாரண குடிமகன் பிழைப்பில் மண்ணை வாரி போட்டாரா?..
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
27-ஏப்-201915:55:13 IST Report Abuse
Darmavanஉன்னிடம் 15 லக்ஷம் வாங்கி மோசடி செய்து விட்டாரா மோடி .மோசடிக்கு அர்த்தம் தெரியுமா அறிவோடு பேசு....
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
26-ஏப்-201919:01:00 IST Report Abuse
Ramakrishnan Natesan
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X