வாரணாசியில் மோடி மனுத்தாக்கல்

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (43)
Advertisement

வாரணாசி: உ.பி.,யின் வாரணாசி லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி இன்று (ஏப்.,26) வேட்புமனு தாக்கல் செய்தார்.



2014 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி, 3.71 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019 லோக்சபா தேர்தலிலும் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று (ஏப்.,25) வாரணாசியில் திறந்த வாகனத்தில், தொண்டர்களுடன் பேரணியாக சென்ற மோடி, கங்கை நதியில் நடந்த பூஜையில் பங்கேற்றார்.

வாரணாசியில் 2-வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி வாரணாசி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மனு செய்ய வந்த பிரதமருக்கு அமித்ஷா, ராஜ்நாத், சுஷ்மா, கட்காரி, ஓ.பி.எஸ்., தம்பித்துரை, உத்தவ் தாக்கரே, நிதிஷ்குமார், ராம்விலாஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.



தொடர்ந்து இன்று காலை கட்சி தொண்டர்களிடையே உரையாற்றினார். பின்னர் அப்பகுதியில் உள்ள காலபைரவர் கோயிலில் வழிபாடு நடத்திய மோடி, கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர் ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். பாடலி வித்தியாலயா பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அன்னபூர்ணா சுக்லா, பிரதமர் மோடியை முன்மொழிந்தார். முன்னதாக அன்னபூர்ணாவின் கால்களை தொட்டு பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
வேட்புமனுத்தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, '' காசி நகர் மக்கள் பிரமாண்டமான பேரணியில் பங்கேற்று ஆதரித்தமைக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல், அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் மோடி.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
26-ஏப்-201917:56:07 IST Report Abuse
KumariKrishnan Bjp உலக நாயகன் நரேந்திரமோடி இவர் இந்திய ஊழல்வாதிகளை ஒழித்துக்கட்டுவார்
Rate this:
Share this comment
truth tofday - india,இந்தியா
27-ஏப்-201908:33:15 IST Report Abuse
truth tofdayஅப்படினா போன தேர்தலிலும் இவர் தான் உலை ஒலித்துக்கட்டுவர் அனல் இன்னும் உல்லல் இருக்கு ஒலிக்கவில்லை அதனில் இவர் இனி உலகளை ஒழிக்க போகிறார் போன தேர்தல் மாதிரி கட்சிகள் டொனேஷன் பேரில் பணம் வாங்குவது உழல் இல்லை என்ன நேர்மை என்ன நேர்மை...
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
26-ஏப்-201916:45:38 IST Report Abuse
Rajavelu E. துரோகிக்கு துணையாக, தமிழகத்தில் இருந்து கூட ஒரு துரோகி சென்றதாக தகவல்.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
26-ஏப்-201917:38:32 IST Report Abuse
Chowkidar NandaIndiaதமிழ்நாட்டு பப்புவிற்கு ஆதரவாக வடநாட்டு பப்பு கூட முன்னர் இங்கே வந்திருந்தாரே....
Rate this:
Share this comment
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
27-ஏப்-201915:01:20 IST Report Abuse
Rajavelu E.புரிஞ்சிடுச்சா நன்றி....
Rate this:
Share this comment
Cancel
26-ஏப்-201916:45:13 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பிரியங்கா போட்டியிடாமல் பின்வாங்கியதே அவர்களின் தோல்வியை காட்டுகிறது. இந்தியா முழுவதும் இந்த தோல்வி தொடரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X