பதவியேற்பு விழா: மோடி திட்டம்

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (95)
Share
Advertisement

புதுடில்லி: தேர்தலில் வெற்றி பெற்றால், வாரணாசியில் பிரதமர் பதவி ஏற்பு விழாவை நடத்த மோடி எண்ணி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் இந்திய சுதந்திர வரலாற்றில், டில்லிக்கு வெளியே நடக்கும் பிரதமர் பதவி ஏற்பு விழா இதுவாக இருக்கும்.டில்லி ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே மத்திய அமைச்சரவை பதவி ஏற்பை நடத்த முடியுமா என்று சட்ட நிபுணர்களிடமும் பா.ஜ., ஆலோசித்து வருவதாக தெரிகிறது.latest tamil newsபாதுகாப்பு படை, உளவுத்துறை ஆகியோரிடம் இருந்தும் அறிக்கை பெறப்பட்டு அதன் பிறகு முடிவு செய்யப்படும். இப்போதைக்கு எல்லாமே வாய் உத்தரவு மூலம் தான் நடக்கிறது. எதுவுமே எழுத்துப்பூர்வமாக இல்லை .
2014 பதவி ஏற்பின்போது சார்க் நாடுகளின் 7 தலைவர்கள் கலந்து கொண்டனர். 2019 பதவி ஏற்பு விழாவில் அனைத்து மதங்களின் வேத மந்திரங்கள் முழங்க, கங்கை கரையில் பதவி ஏற்க விரும்புகிறார் மோடி.


வழக்கத்தை மாற்றிய மோடி


முதல்வர் பதவி ஏற்பு விழாக்கள் வேறு வேறு இடங்களில் நடந்த வரலாறுகள் உள்ளன. அரியானா முதல்வர் பதவி ஏற்பு விழா, டில்லியில் உள்ள அரியானா பவனில் ஒரு முறை நடந்தது. பிரதமரின் பதவி ஏற்பு விழா, டில்லிக்கு வெளியே நடந்தால் அது முழுக்க, முழுக்க அரசியல் முடிவாகத் தான் இருக்கும்; இதில் சட்டப் பிரச்னை இருக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.


latest tamil newsபழக்க வழக்கங்களை ஏற்கனவே மோடி பலமுறை மாற்றி உள்ளார். வேறு நாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வந்தால் தலைநகர் டில்லியில் தான் வந்து இறங்குவர். அதையும் மாற்றினார் மோடி. ஜப்பான் மற்றும் சீன தலைவர்கள் வந்தபோது நேராக குஜராத்தில் காந்திநகரில் சென்று இறங்கினர்.
மாநில டிஜிபி, தலைமை செயலாளர்கள் கூட்டம் டில்லியில் தான் எப்போதும் நடக்கும். அதையும் மாற்றி பல்வேறு இடங்களில் நடக்க வைத்தார். எனவே வாரணாசியில் பிரதமர் பதவி ஏற்பு விழா நடந்தால் ஆச்சரியம் இல்லை.

Advertisement
வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manithan - Chennai,இந்தியா
03-மே-201918:18:05 IST Report Abuse
Manithan தோற்றபிறகு என்ன பதவியேற்பு நடக்க போகிறது. வெற்றிகரமான தோல்வியென்று அதற்கும் ஒரு பதவியேற்பு இவர்களாகவே நடத்தி கொள்ள வேண்டியதுதான். ஒருவேளை தேர்தல் கமிஷன் மீதான அதீத நம்பிக்கை காரணமாக இருக்குமோ.
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
03-மே-201916:02:34 IST Report Abuse
TamilArasan நல்ல முடிவு.... காசி புண்ணியபூமி மேலும் உலகின் பலமயான நகரங்களில் ஒன்று....
Rate this:
Cancel
sams - tirunelveli,இந்தியா
02-மே-201918:17:52 IST Report Abuse
sams ALSO PUGAZ SAYING HE IS MANAGEMENT CONSULTANT?????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X