மோடிக்கு சொத்து எவ்வளவு ?

Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (9)
Advertisement
மோடிக்கு சொத்து எவ்வளவு ?

வாரணாசி : இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து மதிப்பை கூறியுள்ளார். மோடிக்கு சொந்தமாக காரோ, டூ வீலரோ இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில், அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று காலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலில் அவர் கொடுத்துள்ள தகவலின்படி; அவரது கையிருப்பில் ரூ. 38,750 ரொக்கமாக உள்ளது எனவும், அவரது பெயரில் சொந்தமாக காரோ, இரு சக்கர வாகனமோ இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ரூ. 1.41 கோடி மதிப்பில் அசையும் சொத்தும், ரூ.1.10 கோடி மதிப்புள்ள அசையா சொத்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karupanasamy - chennai,இந்தியா
01-மே-201905:35:57 IST Report Abuse
karupanasamy .... எத்தனைகோடி சொத்து?
Rate this:
Share this comment
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
27-ஏப்-201911:47:04 IST Report Abuse
Sankare Eswar அவர் உலகத்தை ரவுண்டு அடிச்ச காசையும் இதுல சேக்கணும். ஆங்.... சொல்லிப்புட்டேன்.
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-ஏப்-201921:35:25 IST Report Abuse
அசோக்ராஜ் அடிப்படையில் திருட்டு சொத்துக்கு ஆசை வைப்பவர்கள் இயல்பாகவே மோடியை வெறுப்பார்கள். திருடாமல் தன்னால் பிழைக்க முடியாது என்று அச்சப்படுவார்கள். தலைவன் திருடனாக இருந்தால் தனக்கு பிரச்னை வராது என்று நம்புவார்கள்.
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
02-மே-201907:47:53 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>வருவாய்க்குள்ள கடனீவாங்காமல் குடித்தனம் செய்றாவா பலர் இருக்கோம் ஐயா கோடி என்றால் எங்களுக்கு அதிசயம் லக்ஷம் கூட தேராதுய்யா வருவாய்க்குள்ள வாழறோம் போதும் என்ற மனம் இருக்கு இன்னிவரை ஒரு கிராம் கோல்ட் வாங்கினது இல்லீங்க .ஒரே மக்கள் அவளுக்கு என் நகைகள் போட்டு திருமணம் செய்துவிட்டேன் இன்று எனக்கு இருப்பது மொத்தமே 10ச்வரன் நகைகளேதான் அல்லது அதுக்கும் குறைவேதான் டாம்பீகம் இல்லாத வாழ்க்கை படாடோபம் இல்லாம வாழமுடியும் அனாவசியமா சிலவுகளிலேயே ஹோட்டல்கள் போறதே இல்லீங்க சினிமா பார்ப்பது இல்லீங்க வீட்டுலே செய்வதுதான் துண்ணுவோம் வெளியே வாங்கி தின்பதே இல்லே காசும் சிலவு சுத்தமும் இல்லே என்பதால்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X