பொது செய்தி

தமிழ்நாடு

கன்னியாகுமரியில் துவங்கியது கனமழை

Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (2)
Advertisement

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை தொடங்கியுள்ளது. புயல் சின்னத்தின் தொடக்கத்திலேயே மழை தொடங்கியிருப்பதால் கரையோர மக்கள் கலக்கமுற்றுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. விரைவில் இது புயல் சின்னமாக உருவெடுக்கும். இதனால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வரும் 27 முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சென்றுள்ள குமரி மீனவர்களை கரை திரும்புமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை, அழகிய மண்டபம் பகுதிகளில் கனமழை தொடங்கியுள்ளது. இடி, மின்னலுடன், பெரும் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஏப்-201921:36:10 IST Report Abuse
kulandhai Kannan இன்னொரு ஒக்கி போராட்டம் நடக்குமா என்று மிஷனரிகளும், அவர்களின் விசுவாசிகளான எதிர்கட்சிகளும், தமிழ் டிவி சேனல்களும் நாக்கை சப்பு கொட்டுவது தெரிகிறது
Rate this:
Share this comment
Abraham David - Tuticorin ,இந்தியா
27-ஏப்-201913:00:50 IST Report Abuse
Abraham Davidசக மனிதனை அவன் மதத்தாலும் சாதியிலும் அடையாளப்படுவது உன் போன்ற கீழ்த்தரமான மனிதர்களுக்கு கைவந்த கலை. முன்றேற்றம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்கிற மக்கள் உன் போல அவன் எந்த சாதி மதம் என்று பார்க்கமாட்டார்கள் . ஆக உன் போல் நபர்கள் இருக்கும் வரை இந்தியா முன்னேறுவது கடினம்தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X