ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்வோம்:மோடி பேட்டி

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (15)
Advertisement

வாரணாசி: உ.பி.,மாநிலம் வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்த பிரதமர் மோடி இன்று இரவு இந்தி, ஆங்கிலம் என இந்தியா டுடே , ஆஜ்தக் உள்ளிட்ட தொலைக்காட்சி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கங்கை நதிக்கரை அருகே அமர்ந்தவாறும், நடந்தவாறும் படகில் பயணித்தபடியும் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:


ரபேல் விவகாரத்தில் சிஏஜி எவ்வித முறைகேடும் இல்லை என தெரிவித்துள்ளது. போர் தந்திர விஷயங்களை வெளிப்படையாக கூற முடியாது. ஆனால் பாலகோட் பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதை எதிர்கட்சிகள் கேள்வி எழுப்புகிறது. இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தற்போது எங்களின் ஆட்சியில் நவீன ரக துப்பாக்கிகள் வாங்கியுள்ளோம். குஜராத்தில் இருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் சுட முடியும். இந்தியா மேக்இந்தியா திட்டத்தின் மூலம் பல ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்கிறோம். இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளோம்.


காங்கிரசின் தோல்வி பயம்காங்., உள்ளிட்ட எதிர்கட்சியினருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் மோடியை குறை கூறியவர்கள் தற்போது ஓட்டு மின்னணு இயந்திரத்தை குறைகூறுகின்றனர். நான் யாரையும் எதிரியாக நினைப்பதில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் வாஜ்பாய் வகுத்த கொள்கைகள் மட்டுமே நல்ல பயனை தரும். காஷ்மீரில் முக்கிய கட்சிகள் சமீபத்திய உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தனர். ஆனால் 70 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுப்பதிவாகி உள்ளது. காஷ்மீர் வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. மத்திய அரசின் நிதி நேரடியாக உள்ளாட்சி நிர்வாகத்திற்கு செல்கிறது.காஷ்மீர் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.


அருகதை இல்லை


ஜெய்ப்பூர், புனே, ஆமதாபாத் என கடந்த காலங்களில் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. காங்கிரஸ் காலத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. தேசிய பாதுகாப்பு குறித்து காங்கிரசுக்கு பேச அருகதை இல்லை.
சி.ஐ.ஐ அறிக்கையின்படி வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. முத்ரா லோன் திட்டத்தின் மூலம் பலர் பயன் பெற்றுள்ளனர். புதிய சாலைகள் அமைத்துள்ளோம். சாலைகள் அமைக்கும்போது வேலை வாய்ப்புகள் எப்படி உருவாக்காமல் இருப்போம் ? விவசாயிகள், கிராம முன்னேற்றத்திற்கு இன்னும் பல திட்டங்கள் வைத்துள்ளோம். விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக பெருக செய்துள்ளோம்.


பண மதிப்பிழப்பால் பல நன்மைகள்


பண மதிப்பிழப்பு தேர்தலுக்காக அல்ல. அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் தான் பணத்தை இழந்தனர். கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டது. இதன் காரணமாக வசூல் அதிகரித்தது. பணவீக்கம் குறைத்துள்ளோம். போலி நிறுவனங்களை மூடினோம்.
தற்போது நேர்மையான பண பரிமாற்றம் நடக்கிறது. 2014 ல் பணவீக்கம் பெரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை அல்ல. பண மதிப்பிழப்பால் நாட்டிற்கு நன்மை நடந்துள்ளது. ஆனால் பண மதிப்பிழப்பை காங்கிரஸ் தவறாக பிரசாரம் செய்கிறது. இந்தியாவில் தற்போது பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது.


எனது வீட்டில் கூட ரெய்டு நடத்தலாம்


வருமான வரி ரெய்டு தவறாக நடப்பதாக கூறுகின்றனர். ஆனால் தவறு செய்தவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தாமல் என்ன செய்வது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். நான் ஊழல் செய்வதாக புகார் வந்தால் எனது வீட்டில் கூட ரெய்டு நடத்தலாம். என்னிடம் மறைக்க ஒன்றும் இல்லை. இவ்வாறு மோடி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-ஏப்-201910:22:13 IST Report Abuse
Malick Raja The well actor and all actions proven by Mr.Narendra Modijee... now its count down start .. lets cleared on 23rd May 19
Rate this:
Share this comment
Cancel
Ranga - paapaanpuram,இந்தியா
27-ஏப்-201909:24:35 IST Report Abuse
Ranga
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
27-ஏப்-201908:09:12 IST Report Abuse
Srinivasan Kannaiya இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ..மூன்றாம் ஊடகங்களில் இருந்து நீங்கள் சரியான நம்பக தகவல்கள் பெற்று வெள்ளை அறிக்கை விட்டால் தப்பாக பேசுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X