இலங்கை:வெடிகுண்டு மூலப்பொருட்கள் பறிமுதல்

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019
Advertisement
இலங்கை,வெடிகுண்டு, மூலப்பொருட்கள், பறிமுதல்

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணிலின் வீடு அருகே தற்கொலை படை தாக்குதலுக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இலங்கை பிரதமர் ரணிலின் வீடு அருகே தற்கொலை படை தாக்குதலுக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அலரி பகுதியில் உள்ள ரணில் வீட்டிற்கு அருகே ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இலங்கையின் அம்பாறை, சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டெட்டனேட்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.
இலங்கையில் இன்றிரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரணிலின் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனிடையே கல்முனை- சாய்ந்த மருது பகுதியில் தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கிச்சூடு நடநததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X