பதிவு செய்த நாள் :
ஆஹா!
கூட்டணி பலத்தை நிரூபித்து மோடி அசத்தல்
வாரணாசியில் வேட்பு மனு தாக்கலில் புதுமை
வாரணாசி, மோடி, வேட்புமனு தாக்கல்

வாரணாசி: கூட்டணி கட்சி தலைவர்கள் புடைசூழ, பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்து, அசத்தினார்.
கூட்டணி பலத்தை நிரூபித்து காட்டும் வகையில், பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர்களும் ஏற்பாடு செய்த, இந்த அசத்தலான நிகழ்வு, எதிர்க்கட்சிகளை வாயடைக்க வைத்துள்ளது. தற்போதைய லோக்சபா தேர்தலில், ஆளும் கட்சியான, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, பலம் வாய்ந்த அணியாக களத்தில் உள்ளது. இதற்கு சவால் விடும் வகையில், காங்கிரஸ் தலைமையில், 'மெகா' கூட்டணி அமைக்க, எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள், தோல்வியில் முடிந்தன.

வாரணாசி, மோடி, வேட்புமனு தாக்கல்கூட்டணி பலம்


பிரதான எதிர்க்கட்சியான, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தி.மு.க., உள்ளிட்ட ஒரு சில கட்சிகளுடன் மட்டுமே, கூட்டணி அமைத்துள்ளது. சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும், தனியாக அணி சேர்ந்துள்ளன. மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகியவையும், தனித்தனியாகவே களம் காண்கின்றன.இந்நிலையில், பா.ஜ., தலைவர்கள், தங்கள் கூட்டணி பலத்தை நிரூபித்து காட்டும் வகையில், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.பிரதமர் மோடி, உ.பி., மாநிலம், வாரணாசி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, நேற்று முன்தினமே, அவர், வாரணாசி வந்தார். அங்கு, பிரமாண்ட பேரணியை நடத்திக் காட்டி, எதிர்க்கட்சிகளை வாயடைக்க வைத்தார்.நேற்று, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு தயாரானார். முன்னதாக, கால பைரவர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பின், பா.ஜ., ஓட்டுச் சாவடி முகவர்கள் கூட்டத்திலும் பங்கேற்றார்.இதன்பின்,

வாரணாசியில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடன், கூட்டணி கட்சி தலைவர்களான, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீஹார் முதல்வருமான, நிதிஷ்குமார், லோக் ஜன சக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான, ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரும் வந்தனர்.

பாதலிடம் ஆசி


முன்னதாக, கூட்டணி கட்சி தலைவர்களை வரவேற்ற, பிரதமர் மோடி, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். பிரகாஷ் சிங் பாதல், 91, காலை தொட்டு வணங்கிய மோடி, அவரிடம் ஆசிர்வாதம் பெற்றார்.பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்களும், பா.ஜ., மூத்த தலைவர்களுமான, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் ஆகியோரும், இதில் பங்கேற்றனர்.பனாரஸ் ஹிந்து பல்கலை முன்னாள் முதல்வர் அன்னபூர்ணா சுக்லா, வாரணாசி மயானத்தில், உடல்களை எரியூட்டும், ஜெகதீஷ் சவுத்ரி, பா.ஜ., வின் நீண்ட கால உறுப்பினர் சுபாஷ் சந்தர், விவசாய ஆய்வில் ஈடுபட்டுள்ள ராம் சங்கர் படேல் ஆகியோர், பிரதமர் மோடியின் வேட்பு மனுவை, பரிந்துரை செய்தனர்.

கலக்கம்


வேட்பு மனு தாக்கல் செய்த பின், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த மோடி, அங்கு திரண்டிருந்த, பா.ஜ., தொண்டர்களை நோக்கி, உற்சாகமாக கையசைத்தார்.தே.ஜ., கூட்டணியின் பலத்தை நிரூபித்து காட்டும் வகையில், வேட்பு மனு தாக்கலில், கூட்டணி கட்சி தலைவர்களை ஒன்று திரட்டிய மோடியின் அதிரடி அரசியலால், காங்.,உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.

ஆளும் கட்சிக்கு ஆதரவான அலை

பிரதமர் மோடி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், வாரணாசியில் நடந்த,

Advertisement

பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:நம் நாட்டில், முதல் முறையாக, தற்போதைய தேர்தலில்தான், ஆளும் கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது. காஷ்மீரிலிருந்து, கன்னியாகுமரி வரை, திருவிழா போல், இந்த தேர்தலை, மக்கள் கொண்டாடுகின்றனர்.பா.ஜ., தொண்டர்கள், தேர்தலுக்காக கடுமையாக உழைக்கின்றனர். அவர்கள் தான், உண்மையான வேட்பாளர்கள். நேற்று நடந்த பேரணியின்போது, 'மீண்டும் மோடி, வேண்டும் மோடி' என, மக்கள் குரல் எழுப்பினர். கடந்த ஐந்தாண்டுகளாக, மக்களுக்காக உழைத்ததற்காக, அவர்கள் காட்டிய நன்றிக் கடனாகவே, இதை கருதுகிறேன். வாரணாசியில் நடக்கும் இந்த தேர்தலின் முடிவு, இதற்கு முந்தைய தேர்தல் சாதனைகளை முறியடிக்கும்.கட்சியின், ஒவ்வொரு தொண்டரும், குறைந்தது, 10 வாக்காளர்களையாவது சந்தித்து, ஓட்டு சேகரிக்க வேண்டும். வாரணாசியில் நடந்த பேரணியின்போது, பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல், எல்லாருடனும், சகஜமாக கை குலுக்கியது குறித்து, சமூக வலைதளங்களில், பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.இந்த நாட்டில் உள்ள, கோடிக்கணக்கான தாய்களும், சகோதரிகளும் தான், எனக்கு பாதுகாப்பு. ஊடகங்களை சேர்ந்த நண்பர்கள், தேர்தலுக்காக கடுமையாக பணியாற்றுகின்றனர். அவர்கள், தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

சொத்து எவ்வளவு?

பிரதமர் மோடி, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தபோது, தன் சொத்து விபரங்களையும் தாக்கல் செய்தார். அதில் தனக்கு, 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். இதில், அசையும் சொத்துகளின் மதிப்பு மட்டும், 1.41 கோடி ரூபாய். மேலும், தன் கையிருப்பாக, 38 ஆயிரத்து, 750 ரூபாய் உள்ளதாகவும், தனக்கு சொந்தமாக, காரோ, இரு சக்கர வாகனமோ இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடந்ததற்காக, ஆவேசப்படுகின்றனர். நாட்டில் உள்ள சட்டம், அனைவருக்கும் பொதுவானது. மோடி, ஏதாவது தவறு செய்திருந்தால், அவரது வீட்டிலும், சோதனை நடத்தும் உரிமை, வருமான வரித் துறைக்கு உள்ளது. நரேந்திர மோடி, பிரதமர்


Advertisement

வாசகர் கருத்து (24)

ரத்தினம் - Muscat,ஓமன்
27-ஏப்-201920:04:43 IST Report Abuse

ரத்தினம்மோடி பொது வாழ்க்கைக்காக , நாட்டுக்காக இல்லறத்தை துறந்த தலைவர். நாலஞ்சு பொண்டாட்டிகளையும் டஜன் கணக்கா பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு ஊர் சொத்தை ஆட்டைய போட வேண்டிய அவசியம் இவருக்கு இல்லை. காமராஜரை மாதிரி, இவரை மாதிரி யோகி மாதிரி, ஒழுக்கமான ஆட்கள் தான் நாட்டை ஆள வேண்டும். பிஜேபியில் இது மாதிரி பல தலைவர்கள் உள்ளனர்.

Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
27-ஏப்-201920:08:55 IST Report Abuse

எதிர்க்குரல் ...

Rate this:
S.P. Barucha - Pune,இந்தியா
27-ஏப்-201916:46:12 IST Report Abuse

S.P. Baruchaமாக்கான்கள்

Rate this:
Rajavel - Ariyalur,இந்தியா
27-ஏப்-201915:02:36 IST Report Abuse

Rajavelகோயபல்ஸ் பிரச்சாரம் என்பதை புத்தகத்தில் படித்திருக்கிறோம் , கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது உண்மையாக பார்க்கிறோம்.

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X