பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
50 வயதை கடந்தவர்களை
வீட்டுக்கு அனுப்ப திட்டம்

புதுடில்லி: நாடு முழுவதும், 50 வயதை கடந்த, வேலை பார்க்காமல், 'சீட்'டை தேய்க்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, வீட்டுக்கு அனுப்ப, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஐ.ஏ.எஸ்., கல்தா, மத்திய அரசு

கடந்த நான்கு ஆண்டுகளில், இவர்கள் செய்த வேலைகள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

நடவடிக்கை


மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான, தற்போதைய மத்திய அரசு, ஊழலுக்கு எதிரான விஷயத்தில், கடுமையான நடவடிக்கைகளை எடுத்து


வருகிறது.அதிலும், அரசு துறைகளில், உயர் பதவிகளில் உள்ளவர்களில் சிலர், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக, புகார் எழுந்துள்ளது.இதையடுத்து, 50 வயதைகடந்த அல்லது 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய, 1,143, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கடந்த நான்குஆண்டுகளில், இவர்கள் செய்த பணிகள் என்ன என்பது குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இவர்களில், வேலை எதுவும் பார்க்காமல், வெட்டியாக, 'சீட்'டை தேய்த்து, நேரத்தை ஒப்பேற்றும் அதிகாரிகள் யார் என்பதை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.கடந்த, 1958ல், நிறைவேற்றப்பட்ட, அகில இந்தியபணித் துறை தொடர்பான சட்ட விதிகளின் படி, இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஊழலை ஒழிக்க


இது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளுக்கும்

Advertisement

, மத்திய அரசு, ஏற்கனவே உத்தரவிட்டும், பெரும்பாலான மாநிலங்கள், இதுகுறித்த நடவடிக்கையை இன்னும் துவங்கவில்லை. எனவே, அனைத்து மாநில அரசுகளுக்கும், இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.சரியான நேரத்தில், இதுகுறித்து ஆய்வு நடத்துவதன் மூலம், ஊழலை ஒழிக்க முடியும் என்பதால், தற்போது இந்த நடவடிக்கையை, மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
02-மே-201918:07:38 IST Report Abuse

Jaya Ramஅதெல்லாம் ஒன்றும் வேண்டாம் நமது எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு மனு மத்திய அரசு போட்டால் போதும் அவர் வீரமணி , கனிமொழி ,எஸ்ரா சற்குணம் , சுபவீ போன்றோர் துணையுடன் உங்களுக்கு லிஸ்ட் அனுப்பிவிடுவார் தேவையில்லாமல் காசை கரியாகிக்கிட்டு இல்லையென்றால் இலங்கையில் ஜெகத் ரட்சகன் மூலம் ரூபாய் 28000 கோடி முதலீடு செய்யமுடியுமா ஒரு காலத்தில் கூறுவார்கள் இந்திரா தான் இந்தியா என்று அதுபோல ஸ்டாலினை போல உலக நடப்புகளை தெரிந்தவர் எவரும் இல்லை

Rate this:
shan - jammu and kashmir,இந்தியா
02-மே-201906:23:59 IST Report Abuse

shanஇந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட முன்னூறுக்கும் கூடுதலாக IAS IPS வீட்டுக்கு சென்றுள்ளனர். ஏன் revenue deptt செக்ரெட்டரி திருட்டு கேசில் புருசனும் பொண்டாட்டியும் IRS அதிகாரிகள் கடைசியில் சொல்ல முடியாத நிலைமையில் .தொடர்கிறது களை எடுப்பு

Rate this:
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
01-மே-201915:39:14 IST Report Abuse

Subramanian Sundararamanஅரசியல் வாதிகள் சொல்லும் வேலையை செய்யா விட்டால் அதிகாரி பெஞ்ச் தேய்கிறார் என்று முத்திரை குத்தி அனுப்பிவிடுவார்கள் . மூத்த அதிகாரிகள் தங்கள் கீழ் இருக்கும் அதிகாரிகளை சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்யச் சொல்லி தங்கள் சுய லாபத்திற்கு வற்புறுத்துவார்கள் . அப்படி செய்யாவிட்டால் மோசமான அதிகாரியாக அடையாளம் காட்டப்பட்டு அனுப்பிவிடுவார்கள் . மோசமான அதிகாரி என்பதற்கு அளவுகோல் என்ன ? ஆகவே நேர்மையான அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு ஊழல் அதிகாரிகள் பணியில் தொடருவார்கள் . அப்புறம் ஜாதி , இன , மத அடிப்படையில் favouritism விளையாடும் . இப்போது உள்ள Annual confidential Report for senior officers ஏ இப்படித்தான் செயல் படுகிறது . மாநில அரசு பணியாளர்களுக்கு ஒரு levl வுக்குகீழே இதை எடுத்து விட்டார்கள் .மேல் அதிகாரிகள் இவர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை . நேர்மையான அரசியல் பொறுப்பில் உள்ளவர்களால் மட்டுமே நல்ல முறையில் களை எடுக்க முடியும் .

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X