பதிவு செய்த நாள் :
'வேலூருக்கு தேர்தலை நடத்துங்கள்'
தி.மு.க.,வும் டில்லியில் கோரிக்கை

புதுடில்லி : 'வேலுார் லோக்சபா தொகுதிக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்' என அ.தி.மு.க.வைத்த அதே கோரிக்கையை தி.மு.க.வும் தலைமை தேர்தல் ஆணையத்தில் வைத்துள்ளது.

வேலூர், தி.மு.க.,  தேர்தல் ஆணையம்

தி.மு.க. எம்.பி.க்களான சிவா பாரதி மற்றும் வேலுார் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட கதிர் ஆனந்த் ஆகியோர் நேற்று டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் மேலும்


கூறப்பட்டுள்ளதாவது;மதுரையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு அனுமதியின்றிபெண் தாசில்தார் உள்பட நான்கு பேர் உள்ளே சென்று திரும்பியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு அந்த நான்கு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மட்டும் போதாது. இந்த நான்கு பேருக்கு பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
பின் நிருபர்களிடம்பேசிய சிவா கூறியதாவது: வேலூர் லோக்சபா தொகுதியில் தேர்தலை தள்ளி போடக்கூடாது.

Advertisement

இந்த லோக்சபா தேர்தல் கால அட்டவணைக்குள்ளேயே வேலூர் தொகுதிக்கும் தேர்தலை நடத்த வேண்டும். எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஏற்கனவே நேற்று முன்தினம் வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஏ.சி.சண்முகமும் இதே கோரிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
29-ஏப்-201921:03:21 IST Report Abuse

Poongavoor RaghupathyVellore election must be conducted and Duraimurugan's son must not be allowed to contest the election for some years as per law. Why should Vellore election be postponed when the accused is Duraimurugan's son. Because of Durai's son the trouble and the loss of time and money is for the Nation as a whole. Why should EC punish many and the Nation and letting the accused free. The loss on account of this postponement must be the penalty for Durai's son also. EC must enact proper laws in case of all malpractices in election by candidates and public also.

Rate this:
Tamilselvan - Chennai,இந்தியா
29-ஏப்-201906:50:33 IST Report Abuse

Tamilselvanகுடோன் துரை, கவர் ஆனந்த் இவர்களுடன் குடும்ப கொள்ளையர் நாட்டை திருத்த போகிறார்களாம். இவனுகளுக்கு வெக்கம், மானம் சூடு சொரணை உள்ளதா ? தமிழ்நாட்டின் ஊழலின் A1 இந்த கும்பல் தான். இந்த கும்பலை இந்திய அரசியலில் இருந்து ஒழித்து,உள்ளே தள்ள வேண்டும்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
29-ஏப்-201913:35:02 IST Report Abuse

Manianஅப்பனே, வெட்கம், மானம்,சூடு சொரணை இருந்தால் அரசியல் வியாதி ஆக முடியுமா? கோடிக்கணக்கில் சேர்க்க முடியுமா? சேர்த்த காசுக்கு மானம், ரோஷம்,சூடு சொரணை இருக்குமா? நாய் வித்த காசு கொலைக்குமா, வேப்பெண்ணை வித்த காசு கசக்குமா எப்பவோ சொலவடைகள் வந்து விடடனவே. ...

Rate this:
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
27-ஏப்-201913:48:25 IST Report Abuse

Sadagopan Varadhachariபொதுவாக பேருந்து அல்லது ரெயிலில் பயனசீட்டு இல்லாமல் பயணம் செய்தால் அடுத்து வரும் நிறுத்தத்தில் பயனியை காவலர்களிடம் பயன சீட்டில்லாத பயனியை ஒப்படைத்து விட்டு வாகனத்தின் பயனத்தை தொடருவார்கள். அது போல தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் மாணவரை மட்டும் வெளியே அனுப்பி விட்டு தேர்வை தொடருவார்களே அன்றி தேர்வையே நிறுத்த மாட்டார்கள்.அது போல தேர்தலில் போட்டியிடுபவர்களை மட்டும் தகுதி இழப்பு செய்து விட்டு திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும்

Rate this:
Manian - Chennai,இந்தியா
29-ஏப்-201913:36:07 IST Report Abuse

Manianசட்டம் இதற்கு இடம் கொடுக்காதே. அதை எழுதவேண்டியவர்கள் இதே கயவர்கள்தானே ...

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X