தேனியில் ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு| Dinamalar

தேனியில் ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு

Added : ஏப் 27, 2019 | |
தேனி:தேனியில் மதுரை ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூமை வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவர் செல்வக்குமார் திறந்து வைத்தார். செயலாளர் திருவரங்கபெருமாள், துணைத் தலைவர் சோமசுந்தரம், தேனி தங்க வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் குபேந்திரன், தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.திரைப்பட நடிகை ஷிஜாரோஸ், 'டிவி'

தேனி:தேனியில் மதுரை ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூமை வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவர் செல்வக்குமார் திறந்து வைத்தார். செயலாளர் திருவரங்கபெருமாள், துணைத் தலைவர் சோமசுந்தரம், தேனி தங்க வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் குபேந்திரன், தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.திரைப்பட நடிகை ஷிஜாரோஸ், 'டிவி' நடிகைகள் ஸ்வேதாபாண்டேகர், ஸ்ரித்திகா குத்துவிளக்கு ஏற்றி, தங்க நகைகளை பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.நடிகை ஷிஜாரோஸ் பேசுகையில், ''தேனி மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழகத்தில் 21 இடங்களில் கிளைகளை பரப்பியுள்ள ஜோஸ் ஆலுக்காஸ் குழுமம் தற்போது உங்கள் ஊரில் தனது கிளையை திறந்துள்ளது. அதன் மூலம் நீஙகள் விரும்பும் நகைகளை உள்ளூரிலேயே உலகத்தரத்தில் வாங்கி பயனடையலாம்,'' என்றார்.ஜோஸ் ஆலுக்காஸ் குழும மேலாண்மை இயக்குனர் வர்கீஸ் ஆலுக்கா பேசுகையில், ''இந்தியாவில் பல்வேறு இடங்களிலும், தமிழகத்தில் 21 இடங்களிலும் ஜோஸ் ஆலுக்காஸ் குழுமம் தங்க, வைர விற்பனை கடைகளை திறந்து சிறப்பாக நடத்தி வருகிறது. தேனி ஷோரூமில், திருமண நகை கலெக் ஷன்களான 'சுபமாங்கல்ய', 'பரம்பரா' எனும் பாரம்பரிய நகை கலெக் ஷனும், அற்புதமான கிளாசிக் தங்க, நகைகள் கவரும் வகையில் உள்ளன. மேலும், ஆன்டிக், அன்கட், வைர கற்கள் பதித்த நகை, லைட் வெயிட் நகை இவை எல்லாவற்றிலும் புத்தம் புதிய பிராண்டட் கலெக் ஷன் கிடைக்கும். பி.ஐ.எஸ்., ஹால்மார்க் தங்க நகைகள் வழங்கப்படுகிறது. ரூ.30 ஆயிரம் மதிப்பிற்கு தங்கம் வாங்கும்போது தங்க நாணயம் இலவசமாகவும், அனைத்து பர்சேஸூகளுக்கும் பரிசுகளும், வைர நகைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. துாய 916 நகைகளை வழங்குகிறோம்,'' என்றார். குழுமத்தின் நிர்வாக இயக்குனர்கள் பால் ஜே. ஆலுக்கா, ஜான் ஆலுக்கா ஆகியோர் உடனிருந்தனர்.விழா ஏற்பாடுகளை வணிகத்துறை மேலாளர்கள் தீபு(கேரளா), கிரேஷியஸ் (தமிழகம்), தேனி கிளையின் மேலாளர் ஷிஜோ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X