ராமேஸ்வரம்:இந்திய பெருங்கடலில் உருவான புயல் சின்னத்தால், ராமேஸ்வரம் அருகே பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றினர். மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியுள்ளது. இப்புயல் வடதமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால்ஏப்.,28, 29ல் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனையடுத்து தொலைதுார புயல் எச்சரிக்கையாக நேற்று பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம்எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. . இதன் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், பாம்பன் கடற்கரையில் கப்பல்கள், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement