பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோயிலுக்கு ரூ.1.85 லட்சம் : வறுமையிலும் மூத்த தம்பதியின் தாராளம்

Updated : ஏப் 27, 2019 | Added : ஏப் 27, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
ராமேஸ்வரம்: வறுமையில் வாடும் வயதான முனியதங்கம் 78, தங்கப்பம்மாள் 70, தம்பதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ரூ.1.85 லட்சத்தை நன்கொடையாக வழங்கினர்.துாத்துக்குடியில் முல்லைகாடு முனியசாமி கோயில் தெருவை சேர்ந்த தம்பதி முனியதங்கம், தங்கப்பம்மாள். குழந்தைகள் இல்லை. கூலி வேலை செய்தனர். முதுமையால் வேலைக்கு செல்ல முடியவில்லை. உறவினர் ஒருவர் இவர்களுக்கு மாதம் 5000 ரூபாய்
 ராமேஸ்வரம் கோயிலுக்கு ரூ.1.85 லட்சம் :  வறுமையிலும் மூத்த தம்பதியின் தாராளம்

ராமேஸ்வரம்: வறுமையில் வாடும் வயதான முனியதங்கம் 78, தங்கப்பம்மாள் 70, தம்பதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ரூ.1.85 லட்சத்தை நன்கொடையாக வழங்கினர்.

துாத்துக்குடியில் முல்லைகாடு முனியசாமி கோயில் தெருவை சேர்ந்த தம்பதி முனியதங்கம், தங்கப்பம்மாள். குழந்தைகள் இல்லை. கூலி வேலை செய்தனர். முதுமையால் வேலைக்கு செல்ல முடியவில்லை. உறவினர் ஒருவர் இவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கினார். இப்பணத்தில் செலவு போக மீதி பணத்தை சேமித்தனர். அதில் 1.85 லட்சம் ரூபாயை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நன்கொடையாக கோயில் உதவி ஆணையர் குமரேசனிடம் நேற்று முன்தினம் வழங்கினர்.

முனியதங்கம் கூறியதாவது: எங்கள் சேமிப்பை கடவுளுக்கு கொடுத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறோம். எங்களுக்கு சொந்தமான 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு, நிலத்தை அங்குள்ள பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வழங்கி உள்ளோம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
01-மே-201910:33:36 IST Report Abuse
suresh kumar தரவேண்டும் என்ற மனத்தினை பாராட்ட வேண்டும். அதே சமயம், இவர்களுக்கு உதவி தேவைப்படும் வேறு யாராவது உறவினர்களிருந்தால் அவர்களுக்கு தந்திருக்கலாம். இந்த பணமே, இவர்களின் உறவினர் தந்ததில் சேமித்தது. மற்ற சொத்து இவர்களின் சொந்த உழைப்பில் சேர்த்ததாக இருக்கலாம்.
Rate this:
Cancel
B MAADHAVAN - chennai,இந்தியா
27-ஏப்-201919:29:50 IST Report Abuse
B MAADHAVAN இதுபோல கஷ்டப்பட்டு சொத்துக்கள் சேர்த்த பலர் கோவில்களுக்கு தானமாக கொடுக்கப்பட்டது தான் அரசியல்வாதிகள் நடத்தும் அரசால் ஏமாற்றப்பட்டு எல்லோராலும் சுரண்டப் படுகிறது....
Rate this:
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
27-ஏப்-201917:11:57 IST Report Abuse
Divahar கோவிலுக்கு சாதாரணமாக வருகிற வருமானம் போதும். அளவுக்கு மீறினால் அங்கு ஊழல் நடக்கும் . பணம் கடவுளுக்கு தேவை இல்லை. ஏழைகளாக இருந்தாலும் தகுதியான முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்களுக்கு கொடுத்தால் கூட இறைவனுக்கு கொடுத்தது மாதிரி தான்.
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
29-ஏப்-201908:16:31 IST Report Abuse
TamilArasanஇது போன்ற இறை பக்தி கொண்டவர்களின் கைகளில் கோவில் நிர்வாகத்தை கொடுத்தால் அதன் மூலம் பல முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்களை கோவிலால் திறம்பட நிர்வாகம் செய்ய இயலும் மேலும் கோவிலாவது நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்படும்..... இந்த தம்பதியரின் இறை பக்திக்கு தலை வணங்குகிறேன்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X