ராமேஸ்வரம் கோயிலுக்கு ரூ.1.85 லட்சம் : வறுமையிலும் மூத்த தம்பதியின் தாராளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோயிலுக்கு ரூ.1.85 லட்சம் : வறுமையிலும் மூத்த தம்பதியின் தாராளம்

Updated : ஏப் 27, 2019 | Added : ஏப் 27, 2019 | கருத்துகள் (11)
Share
ராமேஸ்வரம்: வறுமையில் வாடும் வயதான முனியதங்கம் 78, தங்கப்பம்மாள் 70, தம்பதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ரூ.1.85 லட்சத்தை நன்கொடையாக வழங்கினர்.துாத்துக்குடியில் முல்லைகாடு முனியசாமி கோயில் தெருவை சேர்ந்த தம்பதி முனியதங்கம், தங்கப்பம்மாள். குழந்தைகள் இல்லை. கூலி வேலை செய்தனர். முதுமையால் வேலைக்கு செல்ல முடியவில்லை. உறவினர் ஒருவர் இவர்களுக்கு மாதம் 5000 ரூபாய்
 ராமேஸ்வரம் கோயிலுக்கு ரூ.1.85 லட்சம் :  வறுமையிலும் மூத்த தம்பதியின் தாராளம்

ராமேஸ்வரம்: வறுமையில் வாடும் வயதான முனியதங்கம் 78, தங்கப்பம்மாள் 70, தம்பதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ரூ.1.85 லட்சத்தை நன்கொடையாக வழங்கினர்.

துாத்துக்குடியில் முல்லைகாடு முனியசாமி கோயில் தெருவை சேர்ந்த தம்பதி முனியதங்கம், தங்கப்பம்மாள். குழந்தைகள் இல்லை. கூலி வேலை செய்தனர். முதுமையால் வேலைக்கு செல்ல முடியவில்லை. உறவினர் ஒருவர் இவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கினார். இப்பணத்தில் செலவு போக மீதி பணத்தை சேமித்தனர். அதில் 1.85 லட்சம் ரூபாயை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நன்கொடையாக கோயில் உதவி ஆணையர் குமரேசனிடம் நேற்று முன்தினம் வழங்கினர்.

முனியதங்கம் கூறியதாவது: எங்கள் சேமிப்பை கடவுளுக்கு கொடுத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறோம். எங்களுக்கு சொந்தமான 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு, நிலத்தை அங்குள்ள பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வழங்கி உள்ளோம், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X