சென்னை : அக்ஷய திருதியை முன்னிட்டு, தமிழக அரசின், பூம்புகார் நிறுவனத்தின் சார்பில், நகைகள் கண்காட்சி துவங்கப்பட்டு உள்ளது.பூம்புகார் என அழைக்கப்படும், கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில், சென்னை, அண்ணா சாலையில் உள்ள, பூம்புகார் விற்பனையகத்தில், அக்ஷய திருதியை முன்னிட்டு, நகைகள் கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தின் கலைநயமிக்க நவரத்தின கற்கள், ராசி கற்கள், காதணிகள், பவள மாலைகள், நெக்லஸ் வகைகள், வெள்ளி நகைகள், சந்தன மாலை, ருத்திராட்ச மாலை, ஸ்படிக மாலை, பாரம்பரிய நகை வகைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
மேலும், ஐதராபாத் முத்து நகை வகைகள், ரூபி, மரகதம், நீலக் கற்களிலான மாலை வகைகள் ஆகியவை, பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள, அனைத்து கைவினைப் பொருட்களுக்கும், 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி உண்டு.மே 8ம் தேதி வரை நடத்தப்படும் இந்த கண்காட்சிக்கு, தினமும் காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE