சென்னை : கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், சிறார்களுக்கான பயிற்சி வகுப்புகள், 29ம் தேதி முதல்,மே, 10ம் தேதி வரை நடக்கிறது.சென்னை, கிருஷ்ண பக்தி இயக்கம் எனும், 'இஸ்கான்' சார்பில், ஆறு முதல், 12 வயதிற்கு உட்பட்ட மாணவ - மாணவியருக்கு, சென்னையில், மூன்று இடங்களில், பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.வரும், 29ம் தேதி முதல், மே, 10ம் தேதி வரை, வார நாட்களில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில், ஸ்லோகம், மந்திர மெடிடேஷன், பஜனை, பாடல்கள், வேத பாடங்கள், கைவினைப் பயிற்சிகள், உற்சாக விளையாட்டுகள் ஆகியவை நடத்தப்படும்.
இந்த பயிற்சிக்கான உபகரணங்கள் வழங்கப்படுவதோடு, பயிற்சி நிறைவு நாள், போட்டிகள் நடத்தப்படும். இதில், சிறந்து விளங்கும் மாணவ - மாணவியருக்கு, சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்றவர்களும் கவுரவிக்கப்படுவர்.பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் இடம், நேரம், தொடர்பு எண்:l அபிராமபுரம், பிரித்வி அவென்யூ, இரண்டாவது தெரு எண் -2, பஜாஜ் இல்லம். மாலை, 4:30 மணி முதல், 6:30 மணி வரை. மொபைல் எண்: 98400 34498, 97108 99600.l மேற்கு மாம்பலம், வேதசரஸ் அபார்ட்மென்ட், அருகில், முதல் தெரு, விவேகானந்தபுரம். எண்: 11. காலை, 10:00 மணி முதல் 12:30 மணி வரை. 97911 61439.l கே.கே.நகர், டபுள்டேங்க் வாட்டர் ரோடு, கிரீன்பீஸ் அபார்ட்மென்ட். காலை, 9:30 மணி முதல், 12:30 மணி வரை. 88072 40531, 89397 69129.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE