பாரதி மகளிர் கல்லுாரிக்கு ரூ.3 கோடியில் கட்டடம்

Added : ஏப் 27, 2019 | |
Advertisement
பிராட்வே : பாரதி மகளிர் கல்லுாரியில், 3 கோடி ரூபாயில், புதிய கட்டட கட்டுமான பணி, விறுவிறுப்பாக நடக்கிறது. சென்னை, பிராட்வே சாலையில், பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலையில், 13 பாடப்பிரிவுகளும், ஐந்து எம்.பில்., மற்றும் ஆறு பிஎச்.டி., பாடப்பிரிவுகளும் உள்ளன. இதில், காலை, மாலை என இருவேளைகளில், 4,500 மாணவியர் கல்வி

பிராட்வே : பாரதி மகளிர் கல்லுாரியில், 3 கோடி ரூபாயில், புதிய கட்டட கட்டுமான பணி, விறுவிறுப்பாக நடக்கிறது. சென்னை, பிராட்வே சாலையில், பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலையில், 13 பாடப்பிரிவுகளும், ஐந்து எம்.பில்., மற்றும் ஆறு பிஎச்.டி., பாடப்பிரிவுகளும் உள்ளன. இதில், காலை, மாலை என இருவேளைகளில், 4,500 மாணவியர் கல்வி கற்கின்றனர்.பாரதி மகளிர் கல்லுாரியில், மாணவியர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதால், இடநெருக்கடியை தவிர்க்க, புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.

மூன்று கோடி ரூபாய் செலவில், புதிதாக தரைத்தளத்துடன், இரண்டு மாடிகள் கொண்ட கட்டுமானத்தில், 20 வகுப்பறைகள் மற்றும் நான்கு ஆய்வகக் கூடங்கள் வர உள்ளன.கட்டுமான பணி கடந்தாண்டு துவங்கிய நிலையில், ஓரிரு மாதங்களில் பணிகள் முழுமையாக முடிவடைந்து, மாணவியர் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என, கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X