அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை
சபாநாயகருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: 'சபாநாயகர் நடு நிலைமை தவறி, மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுத்தால், தி.மு.க., சார்பில், சபாநாயகர் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

சபாநாயகர், தனபால், தி.மு.க., திமுக, ஸ்டாலின், எம்.எல்.ஏ., கட்சி தாவல், பதவி பறிப்பு




அவரது அறிக்கை: சட்ட அமைச்சர், சி.வி.சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர், சபாநாயகர் தனபாலை சந்தித்து, 'எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது, கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனு அளித்துள்ளனர். இதற்கு காலதாமதம் செய்து, 18

கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, 18 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது. அந்த வழக்கை மாதங்களுக்கு மேலாக தேர்தல் நடத்தாமல், அ.தி.மு.க., ஆட்சி தொடர, பா.ஜ., அரசும், கவர்னரும் அனுமதித்தனர்.

இந்நிலையில், லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் நடத்தப்பட்டது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு, மே, 19ல் தேர்தல் நடக்க உள்ளது. இவற்றில், அ.தி.மு.க., படுதோல்வி அடையும் என்பதை தெரிந்து கொண்டனர். இதனால், சட்ட அமைச்சரும், அரசு கொறடாவும், தங்கள் பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து, சபாநாயகரை சந்தித்து, மூன்றுஎம்.எல்.ஏ.,க்கள் மீது, நடவடிக்கை எடுக்க, மனு கொடுத்துள்ளனர்.

இடைத்தேர்தலில், 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தோல்வி அடைந்து, ஆட்சி

Advertisement

கவிழ்ந்து விடும் என்ற பீதியில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கட்சி சார்பற்றவர்.
அவரது நடவடிக்கைகள் பாரபட்சமற்ற முறையில் இருக்க வேண்டும். கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொடுக்கப்பட்டுள்ள மனு மீது, சபாநாயகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. ஒருவேளை நடுநிலைமை தவறி, சட்டத்தின் கடமைகளை மறந்து, சபாநாயகர் நடவடிக்கை எடுத்தால், அவர் மீது, தி.மு.க., சார்பில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-மே-201905:17:54 IST Report Abuse

meenakshisundaramகுலைக்கிற நாய் கடிக்காது ,இது வைகோ வைப்பார்த்தாலேயே தெரியுமே

Rate this:
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
03-மே-201906:33:23 IST Report Abuse

சூரிய புத்திரன்அதிமுக கட்சியின் கொறடா தங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக செயல் படுவதால் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்ப சபாநாயகரை கேட்டு கொண்டு இருக்கிறார், இது அதிமுக கட்சியின் உள்விவகாரம், இதில் சுடலை குதிப்பதின் பின்னணி என்ன? இலவு காத்த கிளியின் நிலை தான் சுடலைக்கு என்றும். எதிர்வீட்டு குழம்பு சட்டி வாசனைக்கு மூக்கை கொடுத்துட்டு இருக்க சுடலை உன் வீட்டு குழம்பு சட்டி மொத்தமா பூனை நக்கிட்டு போக போகுது பாரு... உன் கட்சியில இருந்து 20 சட்டமன்ற உறுப்பினர்களை அதிமுக உருவிட போறாய்ங்க..... பார்த்து சூதனாமா இரு சுடலை.... உன் கட்சி எம்எல்ஏ 15 பேரை டிஸ்மிஸ் பண்ணிட போறாரு சபாநாயகர்... சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு, உனக்கு தெரியாதா.... பீ.ஹெச் பாண்டியன் 10 திமுக உளுத்தம் பருப்புகளை 30 வருஷம் முன்ன வறுத்து பொடி ஆக்கினது நினைவு இருக்கா.....

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
01-மே-201906:04:31 IST Report Abuse

meenakshisundaramஅப்போ ஏழு பேரை அதிமுக விலேந்து ஸ்டாலின் இழுக்க முயற்சி செய்வதாக நியூஸ் வருதே? அது சரியா? ஒரு சபாநாயகர் மடியிலே இன்னொரு சபாநாயகரை (?) உட்கார வைத்து தமிழக சட்ட சபை வரலாற்றிலே 'இரட்டை சபாநாயகர்' முறையை ஏற்படுத்தியவர்கள் தான் இந்த திமுகவினர். அவங்க சட்ட சபையிலே செய்யாத அசிங்கமே கிடையாது ,தனி வாழ்க்கயிலும் அதே.

Rate this:
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
03-மே-201906:25:33 IST Report Abuse

சூரிய புத்திரன்திமுக என்றாலே அசிங்கம் என்று தானே பொருள்... இதில் புதுசா என்ன இருக்கு ...

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X