இலங்கையில் துப்பாக்கிச்சண்டை: வெடிபொருள் பறிமுதல்

Updated : ஏப் 27, 2019 | Added : ஏப் 27, 2019 | கருத்துகள் (22)
Advertisement
இலங்கை, துப்பாக்கிச்சண்டை, ஆயுதம், வெடிபொருள்

கொழும்பு: இலங்கையின் கல்முனை பகுதியில் சிறப்பு அதிரடி படையினருக்கும், ஆயுத குழுவினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், கல்முனையில் பகுதியில் ஆயுத குழுவினர் உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சமன்துரை பகுதியில் போலீஸ் மற்றும் விமானப்படை அதிகாரிகள் அடங்கிய அதிவிரைவுப்படையினர் அங்கு விரைந்தனர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது, ஆயுத குழுவினர், பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். இதனையடுத்து அங்கு உதவிக்கு ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆயுத குழுவிடமிருந்து 150 ஜெலட்டின் குச்சிகள், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சீருடை, டுரோன், வேன் மற்றும் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை ஈடுபடுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து கல்முனை, சவலகாடே, சமன்துரை போலீஸ் ஸடேசன் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






இந்த மோதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் இல்லை. இருப்பினும், ஒரு போலீஸ் வீரர் உயிர் இழந்திருக்கலாம் எனவும், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
27-ஏப்-201918:55:24 IST Report Abuse
Somiah M நல்ல வேலை ....................புலிகள் இப்பொழுது இல்லாமல் போய் விட்டனர் .இருந்திருந்தால் அனைத்திற்குமே அவர்கள்தான் காரணம் என்று பழி போட்டிருப்பார்கள் .
Rate this:
Share this comment
Cancel
praj - Melbourn,ஆஸ்திரேலியா
27-ஏப்-201916:22:00 IST Report Abuse
praj அலட்சியமாக ஆட்சி செய்யும் திறமையில்லாத ,நேர்மையில்ல்லாத அறிவில்லாத ஆட்ச்சியாளர்கள் தான் உண்மையில் தீவிரவாதிகள். தங்கள் நாட்டுமக்களை பாதுகாக்க தெரியவில்லை அல்லது அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க தெரியவில்லையென்றால் ஏன் பதவியில் இருக்கிறீர்கள்?கேவலமாக இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
27-ஏப்-201913:23:42 IST Report Abuse
bal இத்தனை நாட்களாக என்ன தூங்கிக்கொண்டு இருந்தார்களா...உள்ளூர் போலீஸ் என்ன செய்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X