பொது செய்தி

இந்தியா

"விரைவில் வருவோம்" : ஐஎஸ் மிரட்டல்

Updated : ஏப் 27, 2019 | Added : ஏப் 27, 2019 | கருத்துகள் (95)
Advertisement

புதுடில்லி : பெங்காலி மொழியில் விரைவில் வருவோம் என எழுதப்பட்ட போஸ்டர் ஐஎஸ்.,ன் கிளை நிறுவனத்தின் டெலிகிராம் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.





இந்த போஸ்டர் ஏப்.,25 அன்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் விரைவில் வருவோம் என்ற வாசகத்துடன் முர்ஷலாத் என்ற அமைப்பின் லோகோ இடம்பெற்றுள்ளது. இலங்கையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தி வருவதால் இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்காலி மொழியில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதால் வங்கதேசம் அல்லது மேற்குவங்கத்தில் தாக்குதல் நடத்த ஐஎஸ் அமைப்பினர் திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.




வங்கதேசத்தில் ஏற்கனவே ஐஎஸ் அமைப்பு, உள்ளூர் பயங்கரவாதிகளை ஒன்றிணைத்து ஜமாதுல் முஜாஹிதீன் என்ற அமைப்பை உருவாக்கி, அதை வலுவாக வேரூரன்ற வைத்துள்ளது. இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோல்கட்டா, மேற்குவங்கத்தின் பிற பகுதிகள், அண்டை மாநிலங்களில் தங்கள் இயக்கத்திற்கு தீவிரமாக ஆள் சேர்த்து வந்துள்ளனர். அதனால் இந்த பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுக்கி இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Chennai,இந்தியா
28-ஏப்-201918:29:52 IST Report Abuse
Baskar id கார்டு இல்லாம இனி பஸ் டிக்கெட் அல்லது train டிக்கெட் வழங்க கூடாது . முதலில் முக்கியமா வேற்று ஊரிலிருந்து பெருநகரத்து வண்டிகளில் வருபவர்களுக்கு.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-ஏப்-201903:52:48 IST Report Abuse
J.V. Iyer மம்தாவுக்கு தெரியாமல் பெங்காலில் எதுவும் நடக்க வாய்ப்பில்லை.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
28-ஏப்-201903:10:01 IST Report Abuse
meenakshisundaram ஜனநாயகப் போர்வையில் மம்தா .முக போன்ற (இப்போது நாயுடு ) தீவிர வாதிகள் கோலோச்சிய நாடு இது. மக்கள்தான் விழிப்புடன் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X