டிரெண்டிங்கான மோடியின் படம்

Updated : ஏப் 27, 2019 | Added : ஏப் 27, 2019 | கருத்துகள் (66)
Advertisement

புதுடில்லி : அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதலின் காலை தொட்டு பிரதமர் மோடி ஆசிபெற்ற போட்டோ டுவிட்டரில் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.





உ.பி.,யின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, நேற்று (ஏப்.,26) வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க சென்ற மோடி, 93 வயதாகும் பிரகாஷ் சிங் பாதலின் கால்களை தொட்டு வணங்கி, ஆசி பெற்றார். இதே போன்று வேட்புமனு தாக்கல் அறையில் தனது பெயரை முன்மொழிந்த பெண்கள் கல்லூரி முதல்வரும் 92 வயதானவருமான அன்னபூர்ணா சுக்லாவின் கால்களை தொட்டு ஆசி பெற்றார்.




இந்த படங்களை டுவிட்டரில் வைரலாக்கி, டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள். இந்த ஆண்டின் மிகச் சிறந்த புகைப்படம் இது தான் என பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். அத்துடன், காங்.,ல் இது போன்ற கலாச்சாரங்களையும், மரியாதையையும் எதிர்பார்க்க முடியாது என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மோடி, பாதலிடம் ஆசி பெறும் போட்டோவையும், காங்.,ல் ராகுல் மற்றும் சோனியாவின் கால்களில் மூத்த தலைவர்கள் பலர் விழுந்து ஆசி பெறும் போட்டோக்களை இணைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
03-மே-201910:17:13 IST Report Abuse
TamilArasan 93 வயதில் சிரமம் பாராமல் பிரதமரின் வேட்புமனு தாக்குதலுக்காக பஞ்சாபில் இருந்து வந்துள்ள பாதல் அவர்களின் காலை தொட்டு பிரதமர் வணங்கியது பாராட்டத்தகும் செயலே - மேலும் பிரதமரின் பெரியவர்களிடம் ஆசி பெரும் செயல்தான் சரியானது....
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
29-ஏப்-201912:52:58 IST Report Abuse
ganapati sb 90 தாண்டி திடமாக இருக்கும் அத்வானி மன்மோகன் பாதல் அச்சுதானந்தன் நல்லகண்ணு போன்றோர் பாராட்டத்தக்கவர்களே
Rate this:
Share this comment
Cancel
sripa - muscat,ஓமன்
28-ஏப்-201917:36:00 IST Report Abuse
sripa மோடியின் பணிவு, பக்குவம் மற்றவர்களுக்கு இல்லை. அதுவா அவரது தனித்துவம். மோடி ஒரு யுகபுருஷர். அவர்நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அவர் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்றுநினைக்குந் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. மீண்டும் மோடி வேண்டும் மோடி.
Rate this:
Share this comment
Ramesh - Fremont-California,யூ.எஸ்.ஏ
03-மே-201923:18:55 IST Report Abuse
Rameshஅட்ரா சக்க அட்ரா சக்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X