பொது செய்தி

இந்தியா

விஐபி.,க்களின் சொத்து விபரம் என்ன?

Updated : ஏப் 27, 2019 | Added : ஏப் 27, 2019 | கருத்துகள் (43)
Advertisement

புதுடில்லி : மோடி, ராகுல் உள்ளிட்ட 5 விஐபி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள், தேர்தல் கமிஷனிடம் அவர்கள் அளித்துள்ள பிரமாண பத்திரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சொத்து சேர்ப்பது பொதுவாக ஒரு கலையாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் அரசியல்வாதிகளுக்கு சொத்து சேர்க்கும் ஆர்வம் என்றே கூறலாம். தேர்தல் சமயங்களில் மட்டுமே அவர்களின் சொத்து விபர ரகசியம் வெளியே வரும். அதிலும் 2019 லோக்சபா தேர்தலில், சுப்ரீம் கோர்ட் மற்றும் தேர்தல் கமிஷன், வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் சொத்து விபரங்களையும், வகிக்கும் பதவிகளின் முழு விபரங்களையும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதால் யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அனைவரிடமும் ஏற்படுத்தி உள்ளது.






தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், தோல்வி அடைவார்கள் என்பதை கூட எளிதில் கணித்து விடலாம். ஆனால் அவர்களின் சொத்து மதிப்பை கண்டறிவது அவ்வளவு சுலபமல்ல. நமது அனைத்து கேள்விகளுக்கும் பிரமாண பத்திரங்கள் பதிலளித்துள்ளன. யார் எந்த துறையில், எவ்வளவு முதலீடு செய்துள்ளார்கள்? எவ்வளவு சொத்து உள்ளது? கையிருப்பு, கடன் எவ்வளவு உள்ளது? பல்வேறு கட்சிகளை சேர்ந்த சில அரசியல் தலைவர்களின் சொத்து மதிப்பு விபரம் வெளி வந்துள்ளது. பா.ஜ., காங்., திமுக, காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களின் செல்வ வளம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


சொத்து விபரம் :


மோடி : பிரதமர் மோடிக்கு குஜராத்தின் காந்திநகரில் உள்ள வீடு உட்பட ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது. பிக்சிடு டெபாசிட்டாக ரூ.1.27 கோடியும், கையிருப்பாக ரூ.38,750 ம் வைத்துள்ளதாக தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இது 2014 தேர்தலின் போது அவர் வெளியிட்ட சொத்து மதிப்பான ரூ.1.65 கோடியை விட 10 சதவீதம் அதிகமாகும்.





ராகுல் : காங்., தலைவர் ராகுலுக்கு ரியல் எஸ்டேட், பங்குகளின் சொத்து மதிப்பு 63.4 சதவீதம் உயர்ந்துள்ளது. 33 சதவீதம் பங்குகளில் 32 சதவீதம், அதாவது ரூ.5.19 கோடியை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்துள்ளார். 0.7 சதவீதம் பணமாகவும், 0.1 சதவீதம் தங்கம் மற்றும் நகையாகவும் முதலீடு செய்துள்ளார். ராகுலின் சொத்து மதிப்பு ரூ.15.16 கோடி ஆகும். அவரது கட்சியின் மற்ற வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு. பிபிஎப் கணக்கில் ராகுலுக்கு ரூ.39.8 லட்சம் கடன் உள்ளது என்பது மற்றொரு ஆச்சரியமான விஷயம். ரூ.15.19 கோடி சொத்துடன், ரூ.72.01 லட்சம் மதிப்பிலான பொறுப்புக்களையும் ராகுல் வகித்து வருகிறார்.

ஹேமமாலினி : முன்னாள் நடிகையும், வெகு காலமாக அரசியலில் இருப்பவருமான ஹேமமாலினிக்கு ரூ.108.59 கோடி சொத்து உள்ளது. இதில் ரூ.101 கோடி ரியல் எஸ்டேட் துறை சொத்துக்கள் ஆகும். ரூ.5.75 கோடி மதிப்பிலான பொறுப்புக்கள் இவரிடம் உள்ளது.

சசிதரூர் : காங்., வேட்பாளரான சசிதரூரின் கட்சி பொறுப்பு சொத்து மதிப்பு 15.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இவர் 36.8 சதவீதம் சொத்துக்களை மியூச்சுவல் பண்டாக முதலீடு செய்துள்ளார். காங்., வேட்பாளர்களில் அதிக அளவில் மியூச்சுவல் பண்ட் முதலீடு வைத்திருப்பவர் இவரே. ரியல் எஸ்டேட் துறையில் 2.8 சதவீதம் முதலீடு செய்துள்ளார். இதே போன்று கடன் தொகையை பிக்ஸ்டு டிபாசிட் மற்றும் பத்திரங்களாக சசிதரூர் காட்டி உள்ளார்.காங்., கட்சியில் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் தான் அதிக அளவு சொத்து வைத்திருப்பவர். ஆனால் இவர் அனைத்து தொகையையும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார்.





ஜெயபிரதா : பணம் சேர்ப்பதிலும், ரியல் எஸ்டேட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவரான ஜெயபிரதா, முந்தைய எம்.பி., பதவி காலத்தின் போது 67 சதவீதம் சொத்து வைத்துள்ளார். இவர் கையிருப்பாக ரூ.56.24 லட்சம் வைத்துள்ளார். இவர் 3.1 சதவீதம் தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். மிக குறைந்தபட்சமாக 0.1 சதவீதம் கடன் வைத்துள்ளார். முன்னாள் நடிகையான இவர் அதிகபட்சமாக ரூ.1.7 கோடி அளவிற்கு கட்சி பொறுப்பு வகிக்கிறார். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகளை குறைத்து, பணமாக சொத்து வளத்தை உயர்த்தலாம் என பலரும் இவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

கனிமொழி : தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளான கனிமொழி, கடன் வைத்திருக்கும் 8 வேட்பாளர்களில் இவரும் ஒருவர். ஏறக்குறைய ரூ.15 கோடி அல்லது 50.8 சதவீதம் பத்திரங்களாக பிக்சர்டு டெபாசிட்டில் வைத்துள்ளார். அதிகபட்ச பொறுப்பு மதிப்பு வைத்துள்ளவர்களில் ஒருவரான இவர் ரூ.1.92 கோடி பொறுப்புக்களை வகிக்கிறார். 29.6 சதவீதம் தொகையை ரியல் எஸ்டேட்டிலும், குறைந்தபட்சமாக 6.8 சதவீதத்தை பங்குச்சந்தையிலும் முதலீடு செய்துள்ளார். ரூ.1.18 கோடியை மியூச்சுவல் பண்டாக வைத்துள்ளார். மொத்தமாக இவரது சொத்து மதிப்பு ரூ.28.15 கோடி ஆகும்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
28-ஏப்-201913:10:19 IST Report Abuse
அம்பி ஐயர் அதென்ன ராகுல் போட்டோவுக்குப் பக்கத்துல கனிமொழி போட்டோ....??? அந்த “”அளவுக்கு”” அவங்க உயர்ந்துட்டாங்களா....??? யாராச்சும் பார்த்து கோச்சுக்கப் போறாங்க...
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
28-ஏப்-201913:08:53 IST Report Abuse
அம்பி ஐயர் மக்களுக்கு சேவை செய்ய வந்ததாகக் கூறும் கனிமொழிக்கு எதற்கு இருபத்தெட்டு கோடிக்கான சொத்துக்கள்...??? அனைத்தையும் மக்களுக்கே தரலாமே....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
28-ஏப்-201908:27:26 IST Report Abuse
Srinivasan Kannaiya தேர்தலுக்கு முன்பே ஒரு சொத்துக்கணக்கு.. தோற்றால் ஒரு சொத்துக்கணக்கு .. வென்றால் ஒரு சொத்துக்கணக்கு .. ஆனால் இது எதுவுமே உண்மையாக இருக்காது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X