கெஜ்ரிவால் மனைவிக்கு 3 வாக்காளர் அட்டை

Updated : ஏப் 27, 2019 | Added : ஏப் 27, 2019 | கருத்துகள் (37)
Advertisement

புதுடில்லி : டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு 3 வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.






கிழக்கு டில்லி பா.ஜ., வேட்பாளரான கவுதம் காம்பீரின் பெயர் வாக்காளர் பட்டியலில் 2 முறை இடம்பெற்றிருப்பதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி இருந்தது. இதற்கு பதிலளித்துள்ள பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஹரிஷ் குரானா, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவிக்கு 2103 ல் 3 வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. டில்லி, உ.பி., மற்றும் மேற்குவங்கத்தில் அவருக்கு வாக்காளர் அட்டை உள்ளது என்றார்.





இதற்கு விளக்கம் அளித்துள்ள ஆம்ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ், முதல்வரின் மனைவி தனிநபர். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவரை இதில் இணைத்து பேச வேண்டாம். இரண்டு விஷயங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என பா.ஜ., விரும்பினால், 2019 தேர்தலில் இருந்து காம்பீர், கெஜ்ரிவாலின் மனைவி இருவரையுயே தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
டில்லி பா.ஜ., தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், காம்பீரின் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை. ஆம்ஆத்மி மீடியாவை தவறாக வழிநடத்துகிறது. வேட்பாளர் தன்னை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார். இதில் மறைக்க ஒன்றும் இல்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
28-ஏப்-201910:19:46 IST Report Abuse
pattikkaattaan வெறும் வாக்காளர் அட்டையை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது ... வாக்கு சாவடிக்கு வரும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கவேண்டும் .. இல்லாவிட்டால் வாக்களிக்க முடியாது ... சென்ற தேர்தலில் பார்த்தோமே ..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
28-ஏப்-201908:19:36 IST Report Abuse
Srinivasan Kannaiya உங்கள் ஆட்சி அந்த லட்சணத்தில் நடக்கிறது... வாக்காளர் அட்டை வழங்குபவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அல்லவா இருக்கிறார்கள்......
Rate this:
Share this comment
Cancel
makkal manasu - chennai,இந்தியா
28-ஏப்-201906:40:06 IST Report Abuse
makkal manasu சமீபத்தில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வரவில்லய் என்று தினமலரில் பதிவு செய்திருந்தேன் , அடையாள அட்டை வீடு தேடி வந்தது , உதவி செய்த தினமலருக்கு , அந்த நாலு நல்லவர்களுக்கும் நன்றி . - மக்கள் மனசு
Rate this:
Share this comment
Prabu.KTK - Coimbatore,இந்தியா
28-ஏப்-201911:41:16 IST Report Abuse
Prabu.KTKதினமலர் வாழ்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X