பொது செய்தி

இந்தியா

இலங்கை செல்ல வேண்டாம் : இந்தியா அறிவுறுத்தல்

Updated : ஏப் 27, 2019 | Added : ஏப் 27, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவத்தை அடுத்து இந்தியர்கள் இலங்கை செல்லுவதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.



latest tamil news




கடந்த 21-ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் தற்கொலை படையினர்வெடி குண்டுகளை வெடிக்கச்செய்தனர். இச்சம்பவத்தில் பொதுமக்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இச்சம்பவத்தில் இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்வதாக இந்தியா உறுதி அளித்துள்ளது.தொடர்ந்து இலங்கை அரசு இது குறித்து விசாரணை நடத்திவந்தது.மேலும் நாட்டின் பல்வேறு பகுதிளில் அவசரநிலை பிரகடனப்படுத்தியது.


latest tamil news





அமெரிக்கா எச்சரிக்கை:

இலங்ககையில் மேலும் வெடிகுண்டு சம்பவங்கள் நிகழக்கூடும் என தகவல்கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டிற்கு சுற்றுலாவாக சென்றுள்ள அமெரிக்கர்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.


இந்தியா அறிவுறுத்தல்

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்தியர்கள் அவசியமின்றி இலங்கைக்கு செல்ல வேண்டாம் எனவும், தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பயணத்தைதவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. மேலும் இந்தியர்களுக்கு உதவி ஏதேனும் தேவைப்பட்டால் அங்கு உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
28-ஏப்-201908:10:12 IST Report Abuse
Srinivasan Kannaiya காலத்தே செய்யும் அறிவுரை,,, மக்கள் அனுசரிக்கவேண்டும்
Rate this:
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
27-ஏப்-201920:53:50 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao எந்த வித தாட்சண்யமுமின்றி குண்டு வைத்துக் கொல்லுமிடத்துக்குப் போகாமலிருப்பதே நல்லது.
Rate this:
Cancel
கூடுவாஞ்சேரி கோகிலா நான் அடுத்த வாரம் இலங்கைக்கு இன்பச் சுற்றுலா செல்ல இருக்கிறேன்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
27-ஏப்-201921:19:14 IST Report Abuse
 Muruga Vel...
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
28-ஏப்-201906:31:08 IST Report Abuse
Sanny அது இன்ப சுற்றுலா ஆக இருக்கணும் என்பது எங்கள் பிரார்த்தனை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X