அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வியூகம்!
மத்தியில், மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க...
கூட்டல், கழித்தலில் கட்சிகள் தீவிரம்

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தெரியும் முன், தமிழகத்தில், ஆளும் கட்சி
ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிக்கவும், வியூகம் அமைத்து வருகின்றன. அதே நிலை, மத்தியிலும் நடந்து வருகிறது. அனைத்துக் கட்சி தலைமையும், எத்தனை இடம் தங்களுக்கு கிடைக்கும், பற்றாக்குறைக்கு என்ன செய்யலாம் என, கூட்டல், கழித்தல் கணக்கு போட்டபடி உள்ளன.

மாநிலத்தில், ஆட்சி, வியூகம்

தமிழகத்தில், ௩௮ லோக்சபா தொகுதிகளுக் கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், 18ம் தேதி தேர்தல் நடந்தது. புதுச்சேரியிலும், ஒரு தொகுதியில்தேர்தல் நடந்தது.தமிழகத்தில், நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ல் தேர்தல் நடக்க உள்ளது.சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகள்,தமிழகத்தில் ஆட்சியை நிர்ணயிக்கக் கூடியதாகவும், லோக்சபா தேர்தல் முடிவுகள், மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை முடிவு செய்வதாகவும் உள்ளன.

நடவடிக்கை

ஓட்டு எண்ணிக்கை, மே, 23ல் நடக்க உள்ளது.

அன்று தான், எந்தகட்சிக்கு, எத்தனை, 'சீட்' என்பது தெரியும்.அதுவரை காத்திருக்க, அரசியல் கட்சிகளால் முடியவில்லை. தேர்தல்முடிவுகள் எப்படி இருக்கும் என யூகித்து, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து, ஆலோசிக்கத் துவங்கி உள்ளன.தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், லோக்சபா தேர்தல் முடிவுகளை விட, சட்டசபை தேர்தல் முடிவுகளை அறிய, மிகவும்ஆர்வமாக உள்ளன.

ஏனெனில், தமிழக அரசுக்கு தற்போதைய நிலையில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை தவிர்த்து, பெரும்பான்மை பெற, குறைந்தது, ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய,
கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இல்லையேல், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும்.


எனவே, அ.தி.மு.க., தலைமை, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கை வழியே, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.தி.மு.க.,விற்கு தற்போது, கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து, 97 எம்.எல்.ஏ.,க் கள் உள்ளனர். அக்கட்சி, 22 இடங்களிலும் வெற்றி பெற்றால், எளிதாக ஆட்சியைகைப்பற்றும்.


ஆலோசனை

அந்த அளவுக்கு வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகம். எனினும்,கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தி.மு.க., தலைமை உள்ளது. அதேபோல, எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர் கனவில் மிதக்கின்றனர்.போதிய இடம் கிடைக்காவிட்டால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுத்து, ஆட்சி அமைக்க முயற்சிப்பது, இல்லையேல் ஆட்சியை

Advertisement

கவிழ்ப்பது என்ற ரீதியில், ஆலோசனை நடந்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இவ்விரு கட்சிகளும், ஆட்சியை குறி வைத்து காய் நகர்த்தி வரும் நிலையில், தினகரன் தன் பங்கிற்கு,எத்தனை, எம்.எல்.ஏ.,க்கள் கிடைப்பர், அவர்களை வைத்து, என்ன செய்யலாம் என்று
ஆலோசித்து வருகிறார்.


ஆதாயத்தை நோக்கி

மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, பா.ஜ.,வும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும்,
பல்வேறு வியூகங்களை வகுக்கின்றன. இக் கட்சிகளுக்கு பெரும் பான்மை கிடைக்காத நிலையில், யார் பக்கம் சென்றால், ஆதாயம் அதிகம் இருக்கும் என,மாநில கட்சிகள் கணக்கு போட்டு உள்ளன.ஆனால், மக்கள் என்ன கணக்கு போட்டு வைத்துள்ளனர் என்பது, மே, 23ல் தெரியும்.அன்று தான் ஆட்சி நிலைக்குமா, கவிழுமா, யார் கனவு நிறைவேறும், யார் கனவு பகல் கனவாகும் என்பதெல்லாம் தெரிய வரும். -நமது நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Isaivanan - Vellore,இந்தியா
02-மே-201916:01:41 IST Report Abuse

Isaivanan

Rate this:
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
28-ஏப்-201920:41:49 IST Report Abuse

தோலுரிப்பவன்

Rate this:
Tamilselvan - Chennai,இந்தியா
28-ஏப்-201917:43:48 IST Report Abuse

Tamilselvanசட்டசபைக்கு போனோமா,சட்டையை கிழித்தோமா,வெளிநடப்பு செய்தொமா என்று இருக்க வேண்டும். ஒத்து ஊதுவதற்கு குடோன் துரை,ஜால்றா போடுவதற்கு ஊழல் மன்னன் நேரு, கண் முடி என பல அல்ல கைகள் உண்டு .இது தான் சுடலைக்கு உள்ள ஒரே வழி .அவரது வேறு அரசியல் கனவுகள் பலிக்காது. இவர்கள் செய்த ஊழல்களுக்கு ,தமிழகத்துக்கு இழைத்த துரோகங்களுக்கும் தமிழக மக்கள் சரியான தண்டனையை இதுவரை வழங்க வில்லை. இதை நினைத்து மீண்டும் பதவிக்கு வந்து குடும்பத்தோடு கொள்ளை அடிக்க துடிக்கின்றனர் இந்த கும்பல். மக்கள் மிக தெளிவாக இருக்கின்றனர். இந்த அரசியல் ஊழல் புற்று நோய்,முற்றிலும் அரசியல் அரங்கத்தில் இருந்து ஒழிக்கப்படும்.

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X