தமிழகத்திலேயே அரசு பணி ''தமிழகத்திலேயே, அரசு வேலை வழங்க வேண்டும்,'' என, தங்கமங்கை கோமதி மாரிமுத்து விருப்பம் தெரிவித்தார். ஆசிய தடகள போட்டிகள், கத்தார் நாட்டின், தோகா நகரில் நடந்தன. அதில், 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில், திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து, தங்கம் வென்றார். நேற்று முன்தினம் அவர், சென்னை வந்தார். அவருக்கு, மாணவ - மாணவியர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர், மகேஷ் குமார் அகர்வாலை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இது குறித்து, கோமதி மாரிமுத்து கூறியதாவது:நான், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தான், தடகள போட்டியில் பங்கேற்றேன்.
கல்லுாரியில் படிக்கும் போது, என் விளையாட்டை மேம்படுத்தி கொண்டேன். தங்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக அரசுக்கும், எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி. தமிழகத்திலேயே, அரசு வேலை கிடைக்காதது எனக்கு வருத்தமாக உள்ளது. விளையாட்டு பிரிவில், அரசு பணிக்கு விண்ணப்பிப்போருக்கு, தமிழகத்திலேயே, பணி வழங்க வேண்டும் என, அரசிடம் வேண்டுகிறேன். என்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் அழைத்து பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE