ஆலோசனை கூட்டத்தில் சைல்டு லைன் வலியுறுத்தல்
திண்டிவனம்:திண்டிவனம் பகுதிகளில் பஸ்களில் படிகட்டு பயணத்தை அனுமதிக்க கூடாது என சைல்டு லைன் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விழுப்புரம் சைல்டு லைன் திண்டிவனம் தாலுகா அளவிலான ஆலோசனைக் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். தாசில்தார் ரகோத்தமன் தலைமை தாங்கினார்.மண்டல துணை தாசில்தார் வேலு, மாவட்ட கல்வி உதவி அலுவலர் மோகன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சங்கர், தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயபாலன், குழந்தைகள் நல குழு உறுப்பினர் லுாயிஸ் சேவியர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் அலெக்ஸ், செஞ்சி சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் குழந்தைகள் எதிர்நோக்கும் பல்வேறு சமுதாய சிக்கல்கள், அவற்றிற்கான தீர்வுகள் குறித்து ஒவ்வொரு துறை அதிகாரிகள் கருத்துகளை முன் வைத்தனர்.பள்ளிக்கு பஸ்சில் செல்லும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிய படி செல்லுகின்றனர். இதன் காரணமாக தவறி விழுந்து இறந்த சம்பவங்கள் நடந்துள்ளன.மாணவர்கள் பஸ் படிகட்டு பயணத்தை அனுமதிக்கக்கூடாது. இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குஎச்சரிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.மேலும், வளர் இளம் பருவமாணவிகள்திசை மாறிச் செல்வதும், குழந்தை திருமண சட்டம் குறித்தும் தெரியாமல் இருக்கின்றனர்.இதுபோன்றபிரச்னைகள் குறித்து உளவியல் ரீதியாக பள்ளிகளில் ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE