பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'போனி' புயல்: தமிழகம் தப்பித்தது:
ஆந்திராவுக்கு, 'அலர்ட்'

சென்னை: 'போனி புயலால்,தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது; மிதமான மழை இருக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

 'போனி' புயல், தமிழகம்,தப்பித்தது, ஆந்திராவுக்கு, 'அலர்ட்'

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, 'போனி' புயலாக மாறியுள்ளது. இந்த புயல், நேற்று மாலை, இலங்கை, திரிகோணமலையில் இருந்து, தென் கிழக்கே, 750 கி.மீ., மற்றும் சென்னைக்கு தென் கிழக்கே, 1,050 கி.மீ.,யில் நிலை கொண்டிருந்தது; வடமேற்கு திசையில், மணிக்கு, 15 கி.மீ.,வேகத்தில் நகர்ந்தது.

இன்று, அதி தீவிர புயலாக மாறும் என்பதால், மணிக்கு, 110 முதல், 150 கி.மீ.,க்கு, காற்றின் வேகம் இருக்கும். நாளை மற்றும் நாளை மறுநாள் மேலும் வலுப்பெற்று, மிக அதி தீவிர புயலாக மாறும். அப்போது, காற்றின் வேகம் மணிக்கு, 170 கி.மீ., வரை அதிகரிக்கும்.

வங்கக் கடலின் மத்திய பகுதிக்கு, தமிழக கடற்கரை யோரம் புயல் வந்ததும், வட கிழக்கு திசையில் திரும்பி, ஆந்திரா மற்றும் ஒடிசாஎல்லையை நோக்கி நகரும். தமிழக கடற்கரை யோரம் வரும் போது, லேசாக காற்றின் தாக்கமும், மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.

தொடர்ந்து, வங்க கடலில் நகரும் போனி புயல், 2 முதல், 3ம் தேதி வரை, ஆந்திராவின் வடக்கு கடற்கரை பகுதியை ஒட்டி சுழன்று, 3ம் தேதி விசாகப்பட்டினம், புவனேஸ்வர் இடையே கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது.கரையை கடக்கும் முன்னரும், கரையை கடக்கும் போதும், மிக அதிக வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம்.

அதனால், நில பகுதிகளில், மிக அதிக பாதிப்பு ஏற்படும்.துறைமுகங்கள், கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள், சிறிய கப்பல்கள் பலத்த சேதம் அடையும். மரங்கள் முறிந்து விழும். பழைய கட்டடங்கள், குடிசை வீடுகள், மொபைல் போன் மற்றும் மின்சார கோபுரங்கள் பாதிக்கப்படலாம். அதனால், ஆந்திராவில் தற்போதிருந்தே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை, இன்று முதல், 1ம் தேதி வரை, கடலோர மாவட்டங்களில் வெயில் குறைவாகவும், வெப்பத்தின்தாக்கம் அதிகமாகவும்

Advertisement

இருக்கும். சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என, வானிலை மையம் கணித்துள்ளது.

'மிதமான மழை பெய்யும்'போனி புயல் குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின், சென்னை மண்டல துணை பொது இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது: போனி புயல் மிக அதி தீவிர புயலாக மாறும் வாய்ப்புள்ளது. தமிழகத்தின் வட கடலோர பகுதி யில் இருந்து, 300 கி.மீ.,யில், வங்கக் கடலுக்குள் புயல் வந்து செல்லும்.


தமிழகத் தின் பக்கம் நெருங்கி வந்து, வட கிழக்கு திசைக்கு மாறுவதால், சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாது; தமிழகத்திலும், கரையை கடக்க வாய்ப்பில்லை.

எனவே, தமிழகத்துக்கு பெரிய பாதிப்பு இருக் காது; மிதமான மழை பெய்யலாம். புயலுக்கு பின், கோடைக்காலத்துக்கான இயல்பான வெப்ப நிலை மீண்டும் ஏற்படும். வங்கக் கடலில் உள்ள மீனவர்கள், உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்; புயல் கரையை கடக்கும் வரை,மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
29-ஏப்-201921:42:07 IST Report Abuse

R chandarHeading in this edition reveals tamilnadu excluded from getting rains in this cyclone , kindly note with out cyclone tamilnadu will not get rains any how v pray for good rains with cyclone, V r in absolute need of rains to get stored in reservoir, v should not bother for the cyclone v should pray for good rains with out affected by cyclone, getting depression like this during summer is a great gift for getting good rains and escape from summer . Very sad for tamilnadu now for not getting rains in this cyclone, let us all pray for good rains during this summer to avoid water problem at least in near by states.

Rate this:
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
29-ஏப்-201920:51:20 IST Report Abuse

Poongavoor RaghupathyThis report of meteorology department shows scientifically we are unable to predict the Nature. The same condition is there in Astrology that nobody can predict the future life of an individual but is capable to know the past life of the same individual. This clearly shows that Science can not win over the Nature and that is nothing but GOD. Astrology is only a guess work in case of future life and it can not exactly predict the future. The lesson learnt from this is that if we do evils we are bound to suffer for on account of for example water scarcity and heat and if we do good deeds we get water from rain and live a better life. Instead of believing only in Science we have to believe in our deeds for a good living. So when the rains have failed in a place the reason is more evils in that place and hence people suffer. If we want rains and free from water scarcity we have to lessen our evils.If we pray to GOD but we dot stop our evils this may not give rains and we have to face Nature's fury like cyclones earth quacks etc.Let us lessen our evils and Nature will lesson our problems.

Rate this:
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
29-ஏப்-201916:09:40 IST Report Abuse

Vakkeel VanduMuruganதமிழகம் பக்கம் புயல் வந்தாலும், கேரளாவுக்கு தான் மழை பெய்யுது. என்ன கொடும சரவணா

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X