மீண்டும் நவீன் பட்நாயக்?

Updated : ஏப் 29, 2019 | Added : ஏப் 29, 2019 | கருத்துகள் (16)
Advertisement

பிஜு ஜனதாதளம் கட்சியை சேர்ந்த, முதல்வர், நவீன் பட்நாயக் தலைமையிலான, ஒடிசா மாநிலத்தில், ஏற்கனவே, மூன்று கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், நான்காவது கட்டம், இன்று நடக்கிறது. அத்துடன், அந்த மாநிலத்தில், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் முடிவடைகிறது. அந்த மாநிலத்தின் முதல்வர் பதவியில், 19 ஆண்டுகளாக, அசைக்க முடியாமல் இருக்கும் நவீனுக்கு எதிராக, பா.ஜ., - காங்., போன்ற கட்சிகள் ஏதேதோ செய்தும், ஒன்றும் ஆகப் போவதில்லை என, இப்போதைய நிலைமை கூறுகிறது.






சட்டசபை தேர்தலில், அவர் கட்சி தான் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என, இங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், லோக்சபா தேர்தலில், இங்குள்ள 21 தொகுதிகள் யாருக்கு கிடைக்கும் என்பதிலும், நவீன் பக்கமே அதிக ஆதரவு உள்ளது. ஏற்கனவே, 15 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள, ஆறு தொகுதிகளுக்கு, 29ல் தேர்தல் நடக்க உள்ளது.

மயுர்பாஞ்ச், பாலாசோர், பாத்ராக், ஜஜ்புர், கேந்திரபாரா, ஜெகத்சிங்பூர் ஆகிய ஆறு தொகுதி களில், பிரசாரம் சூடுபிடித்துள்ளது. எனினும், முதல்வர் நவீன் தவிர்த்து, பிற அறிமுகமான முகங்களை காணவில்லை. பிரதமர் மோடியும், ராகுலும் வந்து பிரசாரம் செய்துள்ளனர். ராகுலை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், உ.பி., மற்றும் கேரளாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்; பிரபலங்கள் ஒருவர் கூட, ஒடிசா வந்து பிரசாரம் செய்யவில்லை.





ஆனால், பா.ஜ.,வில் அப்படியில்லை. நவீன் கட்சியிலிருந்து, பா.ஜ.,வுக்கு தாவிய, பாய்ஜயந்த் பாண்டா, தொண்டர்களுடன் இறங்கி, கீழ் மட்டத்தில் வேலை செய்கிறார். இதனால், பிஜு ஜனதாதளம் மற்றும் பா.ஜ., இடையே தான் போட்டி இருப்பதாக தெரிகிறது; பிற கட்சி களை காணோம்!

- சாந்தனு பானர்ஜி -
சிறப்பு செய்தியாளர்

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
29-ஏப்-201916:24:25 IST Report Abuse
இந்தியன் kumar நல்லது செய்திருந்தால் மக்கள் தொடர்ந்து வாக்களிப்பார்கள் இல்லை என்றால் எதிர்க்கட்சி வரிசை கொடுப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
Anupama - Kansas,யூ.எஸ்.ஏ
29-ஏப்-201912:36:02 IST Report Abuse
Anupama மத மாற்ற காளான்கள் ஆபத்தானவை. ஸ்ரீலங்காவின் உதாரணம் இதற்கு போதும்.
Rate this:
Share this comment
Cancel
சிற்பி - Ahmadabad,இந்தியா
29-ஏப்-201910:57:09 IST Report Abuse
சிற்பி அரசியல்வாதிகளை மூன்றாக பிரிக்கலாம், 1) மக்களுக்காகவே ஆளுவது - மொரார்ஜி, காமராஜ், புரட்சிதலைவர், வாஜ்பேயி, மோடி போல. இவர்களால் நாடு மிகவும் பயன்பெரும். எதிர்காலத்தையே மாற்றி அமைப்பவர்கள். இவர்கள் இரவா வரம் பெற்றவர்கள். 2) அமைதியாய் ஆர்பாட்டம் இல்லாமல், மக்களுக்கு தொந்தரவு தராமல், கொள்ளை அடிக்காமல், ஊழல் இல்லாமல் ஆளுவது இரண்டாம் வகை. நிதிஷ், பிஜு பட்நாயக், அமரிந்தர் சிங், போன்றவர்கள். இவர்களும் மேலானவர்களே. 3) மூன்றாவது ரகம் : ஆர்பாட்டத்திர்க்கே பிறந்து, ஆர்பாட்டமே செய்து, ரகளை செய்து, மக்களை துன்புறுத்தி, மக்களை பிரித்து வைத்து தேர்தலில் வெல்ல முயலுவது, ஊழல் ஊழல் ஊழல் தவிர வேறு இல்லவே இல்லை என்று ஆளுவது, குடும்ப ஆட்சி செய்பவர்கள், ரவுடித்தனம், அடாவடிதனம், ஆட்டைய போடுதல், அடுத்தவனை குற்றம் மட்டுமே சொல்லுதல், பெயில்காடி என்று இவர்கள் மூன்றாவது ரகம். இவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் கேடு தான். வேறு இல்லை. இவர்களை அழித்தால் தான் நாடு நன்றாக இருக்கும். யார் யார் எப்படி எப்படி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
29-ஏப்-201912:05:50 IST Report Abuse
Pannadai Pandianஇந்த மூன்றாவது ரகம் கட்டுமரம், அந்தோனியோ வின்சி, ராபர்ட் வடரா-பிரியங்கா குடும்பம், மாயாவதி, அகிலேஷ், லாலு குடும்பம்…...அவனுங்கள அரபி தேசத்துக்கு அனுப்பிடலாம்…....
Rate this:
Share this comment
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
29-ஏப்-201917:48:15 IST Report Abuse
Kumarசிற்பி, அது என்ன சைக்கிள் காப்பில் மோடி பெயரை உடுறா. வடை சுடும் மன்னனுக்கு மே 23 வழியனுப்பும் விழா நடப்பதை வந்து பாரு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X