அரசியல் செய்தி

தமிழ்நாடு

3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

Updated : ஏப் 30, 2019 | Added : ஏப் 30, 2019 | கருத்துகள் (23)
Share
Advertisement
3 எம்.எல்..ஏ.,க்களுக்கு, நோட்டீஸ், சபாநாயகர்

சென்னை: தினகரன் ஆதரவாளர்கள் மூன்று எம்.எல்.ஏ.க்கள் மீது அதிமுக கொறடா அளித்த புகாரின் நடவடிக்கையாக இ்ன்று சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், அறந்தாங்கி - ரத்தினசபாபதி, விருத்தாசலம் - கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி - பிரபு ஆகியோர், தினகரன் ஆதரவாளர்களாக உள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அரசு கொறடா ராஜேந்திரன், மூவர் மீதும் புகார் மனுவுடன், வீடியோ காட்சிகள் மற்றும் ஆவணங்களையும், கடந்த சில தினங்களுக்கு முன் ஆதாரங்களாக சமர்ப்பித்துள்ளார்.
இதன் அடிப்படையில், சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்து மூன்று எம்.எல்.ஏ.,க்களுக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தார். இவர்கள் 7 நாட்களுக்குள் நேரிலோ, அல்லது எழுத்துபூர்வமாகவோ விளக்கம் அளிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news





திமுக மனு


சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து சட்டபேரவை செயலாளர் சீனிவாசனிடம் திமுக மனு அளித்தது. திமுக அமைப்பு செயலாளர் பாரதி மற்றும் கிரிராஜன் ஆகிய நிர்வாகிகள் இந்த மனுவை அளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
30-ஏப்-201923:28:02 IST Report Abuse
KumariKrishnan Bjp ஏற்கெனவே 18 இப்போது 3 அனைத்துமே தினகரனும் ஸ்டாலினும் விலைகொடுத்து வாங்கியதுதான்
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
30-ஏப்-201923:11:31 IST Report Abuse
PANDA PANDI நல்ல மனுஷன். பாவம் எப்படி இருந்தவர். இப்படி ஆயிஇட்டார். எப்பொழுதும் SOAPS. EPSOPS
Rate this:
Cancel
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
30-ஏப்-201923:06:59 IST Report Abuse
C.Jeyabalan தினகரன் எடுபிடி பழனிசாமி திருவிளையாடல் ரெம்ப சிறப்பா சிரிப்பா நடந்து கொண்டிருக்கிறது பாவம் தனபால் கொறடா கொடுத்தா "நோட்டீஸ்" கொடுத்துதானே ஆக வேண்டும் இந்த பொம்மலாடடத்தை பிஜேபி கவனமாக கண்காணிக்கிறது. ஸ்டாலின் முதல்வர் ஆசை நிறைவேறுமா அல்லது நிராசையில் முடியுமா? காலம்தான் பதில் சொல்லும். என்றாலும், எடுபிடி பழனிசாமி ஒரு அரசியல் சாணக்கியனாகிக்கொண்டிருப்பது தெரிகிறது ஜெயலலிதா இறந்தபோது "விலாசம்' இல்லாதிருந்த எடுபிடியார், சசிகலாவின் காலை நான்கு கால் பாய்ச்சலில் சென்று பவ்யமாக தடவிய எடுபிடி ஆசாமி இன்று யாராலும் அசைக்க முடியாத முதல்வராகிக்கொண்டிருக்கிறார். இன்றைய நிலையில் ஜெயலலிதா வந்தால்கூட எடுபிடியாரிடம் கையேந்த வேண்டுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது இந்த மூன்று ஏமாளிகளும் அந்த பதினெட்டு கும்பலுடன் சேரும் நாள் வெகுதொலைவில் இல்லை அற்ப ஜாதி தலைவன் மதவாதி எனும் இருவர் அணியும் இந்த நிலையம் அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X