பனை மரங்களிலும் வருவாய் ஈட்டலாம்

Added : மே 01, 2019 | |
Advertisement
வரப்பு ஓரங்களில், பனை மரங்களை நட்டால், பல விதங்களில் வருவாய் ஈட்டலாம். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பெரும்பாலான விவசாயிகள், ஏரி மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி தான் நெல் பயிரிடுகின்றனர்.கோடை காலங்களில், நெல், காய்கறி பயிர்களை சாகுபடி செய்வது குறைவு தான். இதுபோன்ற காலங்களில், வருவாய் இன்றி நிலம் தரிசாக இருக்கும்.அவ்வாறு இருப்பதை தவிர்க்க, வரப்பு ஓரங்களில்

வரப்பு ஓரங்களில், பனை மரங்களை நட்டால், பல விதங்களில் வருவாய் ஈட்டலாம். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பெரும்பாலான விவசாயிகள், ஏரி மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி தான் நெல் பயிரிடுகின்றனர்.கோடை காலங்களில், நெல், காய்கறி பயிர்களை சாகுபடி செய்வது குறைவு தான். இதுபோன்ற காலங்களில், வருவாய் இன்றி நிலம் தரிசாக இருக்கும்.அவ்வாறு இருப்பதை தவிர்க்க, வரப்பு ஓரங்களில் பனைமரம் நட்டு வைத்தால், கோடை காலங்களிலும் வருவாய் கிடைக்கும்.
இது குறித்து, வயல் ஓரத்தில் பனை மரம் நட்டுள்ள, விவசாயி, டி.கணேசன் கூறியதாவது: வயல் வரப்பு ஓரங்களில் பனை மரம் நட்டால், துவக்கத்தில், ஓலையில் வருவாய் கிடைக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு பின், நுங்கு, பனங்கிழங்கு ஆகிய விளைப்பொருட்களில் இருந்து கூடுதல் வருவாய் கிடைக்கும். கோடை காலங்களில், தரிசாக இருக்கும் நிலத்திலும், பனை மரங்கள் மூலமாக வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 88835 58711

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X