சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மரத்தை தீயிலிருந்து காக்கும் மரம்!

Added : மே 02, 2019
Advertisement
மரத்தை தீயிலிருந்து காக்கும் மரம்!

கட்டடங்கள் முதல் கப்பல்கள் வரை பல கட்டுமானங்களுக்கு மரம் பயன்படுகிறது. ஆனால், மரம் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. இதைத் தடுக்க பலவித வேதியல் கண்டுபிடிப்புகள் வந்துள்ளன.
இருந்தாலும், பின்லாந்தை சேர்ந்த, வி.டி.டி., தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், மரம் தீப்பிடிக்காமல் தடுக்க, மரக்கூழிலிருந்தே ஒரு பொருளை உருவாக்கி அசத்தியிருக்கின்றனர்.
ஹெப்செல் (HefCel) என்ற அந்த வேதிப் பொருள், பிற தீ தடுப்பான்களைவிட 10 மடங்கு சக்தி வாய்ந்த்து என அதைக் கண்டுப்பிடித்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பசை வடிவில் இருக்கும் ஹெப்செல்லை, மரச் சாமான்களின் மேற்பரப்பில் பூசிவிட்டால், ஆக்சிஜன் அதனுள் போகாதவாறு தடுத்து விடுகிறது. இதனால், விறகைப் போல தீயிலேயே போட்டாலும், ஹெப்செல் பூசப்பட்ட மரம் தீப்பிடிப்பதில்லை.
ஹெப்செல்லை ஸ்பிரே மற்றும் பூச்சுக்களாக உருவாக்குவதிலும் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். அடுத்து, இத்தொழில்நுட்பத்தை பெருமளவில் தயாரிக்க, தொழிற்துறையினரிடம் பேசி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X