பதிவு செய்த நாள் :
'நாங்களும் துல்லிய தாக்குதல் நடத்தினோம்'
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அதிரடி

புதுடில்லி: ''முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும், பல முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்து. ஆனால், பா.ஜ., போல, அவற்றை நாங்கள் ஓட்டுக்காக பயன்படுத்தியதில்லை,'' என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ongress,Manmohan Singh,காங்கிரஸ்,மன்மோகன் சிங், துல்லிய தாக்குதல், மோடி,
அவர், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த, 2016ல், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், சமீபத்தில், பாகிஸ்தானின் பாலகோட்டிலும், உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் விமானப்

படையினர் நிகழ்த்திய துல்லியத் தாக்குதல்களை, பிரதமர் மோடி, ஓட்டுக்காக பயன்படுத்துவது வெட்கக்கேடானது. இது போல, எத்தனையோ துல்லியத் தாக்குதல்களை, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிகழ்த்தியுள்ளது. ஆனால், அதுகுறித்து, ஒருபோதும் விளம்பரப்படுத்தியதில்லை; ஓட்டுக்காக பயன்படுத்தியதும் இல்லை.

ராணுவ நடவடிக்கையை, ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவதை விட, இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு, தகுந்த பதிலடி கொடுப்பது முக்கியம் என்பது தான், எங்கள் நிலைப்பாடு. ஆனால், மோடி, ராணுவத்தினரின் வீரத்தை, தங்கள் கட்சிக்கு கிடைக்கும் ஓட்டுக்காக பயன்படுத்துகிறார். கடந்த, 70 ஆண்டுகளில், எந்த அரசும், நம் ராணுவத்தினரின் வீரத்தில் ஒளிந்து கொண்டு ஓட்டு கேட்கவில்லை. ராணுவத்தை அரசியலுக்கு இழுப்பது வெட்கக்கேடு; ஏற்க முடியாதது.இது, நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வறுமை ஆகியவற்றில் இந்த அரசு சந்தித்த, மன்னிக்க முடியாத தோல்விகளை திசை திருப்பும் நடவடிக்கை.மோடி அரசு, தேசப் பாதுகாப்பு என்ற

Advertisement

ஒரேஅம்சத்தை கையிலெடுத்து, வெற்றுக் கூச்சல் போடுகிறது.

புவிசார் அரசியலில், அந்தந்த சூழலுக்கு ஏற்பவே, நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். வரலாற்றை திரும்பிப் பார்த்தால், இது புரியும். பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத மையமாக தனிமைப்படுத்தி, பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு, சர்வதேச சமூகத்தை அணி திரட்டுவது தான், எங்கள் நோக்கம். அதில் நாங்கள் வெற்றியும் பெற்றோம். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (136)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
06-மே-201918:18:50 IST Report Abuse

B.s. PillaiTerrorists crossed through the ocean and attacked Mumbai.MMS kept silent. Did not do any retaliation attack. Nor punished any Indian Navy officer for failing to protect the sea borders. Several Navy ships and submarines caught fire mysteriously in very short span and were destroyed . No action by him. Do not think that you can fool the Public always.

Rate this:
Velumani K Sundaram - Pondicherry,இந்தியா
09-மே-201916:35:21 IST Report Abuse

Velumani K SundaramPerfect surgical strike on PUPPET PM MANMOHAN SINGH's bluffs Dr. Swamy ji proved by publishing an RTI report saying that there was 'NO SURGICAL ATTACK' on enemy soil during the CORRUPT ERA OF HINDUSTAN. Modi ji administration did the first one of this kind. Any Hindustani with little brain will not listen to the TRUMPET of PUPPET PM ...

Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
06-மே-201900:47:55 IST Report Abuse

Ram Sekarபுகழு புண்ணாக்கு. பொய் சொல்லாதே. இருக்கறவங்களுக்கு கண்கள் இல்லன்னு நினைச்சியா இல்லை படிக்க தெரியாது, காது கேட்காதுன்னு நினைச்சியா??? பொய் சொல்ற வாய்க்கு போஜனம் இல்ல தண்ணீர் கூட கிடைக்காது, அப்படியே உன்னோட காங்கிரஸ் திமுக மாதிரி திருடி போஜனம் பண்ண நினைச்ச வாயிலேயே செருப்படிதான் விழும். ஹிஸ்டரி சேனல் எல்லா விடியோவும் பார்த்தாச்சு. உன் வேலையே வேற எங்காச்சும் இளிச்சவாயன் இருப்பான் அவன்ட வச்சுக்கோ. இனி பொய் சொன்ன கெட்ட வார்த்தையில் திட்டுவேன், ஜாக்கிரதை. பரதேசி.

Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
06-மே-201900:42:02 IST Report Abuse

Ram Sekarபுகழு...நீ சொன்ன 2010 மற்றும் 2014 ல ஒரு மண்ணும் நடக்கல. ஹிஸ்டரி channel வீடியோ பார்த்தாச்சு. தெளிவா பாரு புரிந்தால். பொய்கள் சொன்னால் பொருத்தமா சொல்ல நினைச்சு நீயே மாட்டிக்கிட்ட.

Rate this:
மேலும் 132 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X