பதிவு செய்த நாள் :
'உயிரை விடுவேனே தவிர, பா.ஜ.,வுக்கு உதவ மாட்டேன்'

ரேபரேலி: ''உயிரை கூட விடுவேனே தவிர, பா.ஜ.,வுக்கு ஒருபோதும் உதவ மாட்டேன்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா தெரிவித்தார்.


காங்., பொதுச் செயலரான பிரியங்கா, உ.பி., மாநிலத்தில் உள்ள, 80 லோக்சபா தொகுதிகளில், 41 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர், அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று முன்தினம், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உ.பி.,யில், பா.ஜ., பலத்துடன் இருக்கும் தொகுதிகளில், அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், செல்வாக்கு மிகுந்த வேட்பாளர்களை, காங்., நிறுத்தி உள்ளது.'அவர்கள் ஜெயிக்காவிட்டாலும், பா.ஜ.,வின் பெரும்பாலான ஓட்டு களை பெறுவர்' எனக்கூறினார்.


இது குறித்து, சமாஜ்வாதி கட்சி தலைவர்

அகிலேஷ் யாதவ் கூறுகையில், 'காங்.,குக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பது அவர்களுக்கு புரிந்து விட்டது. அதனால் தான், புதிய காரணங்களை கண்டுபிடிக்க துவங்கி உள்ளனர்' என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில், 'பா.ஜ.,வும், காங்.,கும் ஒன்று தான். அதனால், காங்.,குக்கு ஓட்டளித்து, உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்' என்றார்.

இந்நிலையில், சோனியாவின் தொகுதியான ரேபரேலியில், நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:பா.ஜ.,வை அழிக்கும் நிலைப்பாட்டில், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். உ.பி.,யில் போட்டியிடும் ஒவ்வொரு, காங்., வேட்பாளர்களும், பா.ஜ.,வின் ஓட்டுகளை, கணிசமாக பெறுவார். என் உயிரை கூட விடுவேனே தவிர, பா.ஜ.,வுக்கு ஒருபோதும் உதவ மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

ரேபரேலியில், பிரியங்கா பிரசாரத்தை, பாம்பு பிடிப்பவர் ஒருவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகே சென்ற பிரியங்கா, அவரிடம் இருந்த பாம்பை வாங்கிக் கொண்டார். பின், அந்த பாம்புடன் விளையாடத் துவங்கினார்.


Advertisement

சுற்றி இருந்த மக்கள், அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 'பாம்புடன் விளையாடாதீர்கள்' என, எச்சரித்தனர். அதற்கு, 'கவலைப்படாதீர்கள், ஒன்றும் செய்யாது' என பிரியங்கா கூறியதை, அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


சிறுவர்களை கண்டித்த பிரியங்கா!


காங்., பொதுச் செயலர் பிரியங்கா, உ.பி., மாநிலம் அமேதி தொகுதியில், சமீபத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, சாலையில் நின்றிருந்த சிறுவர்கள், பிரியங்காவை பார்த்து உற்சாகம் அடைந்தனர். அவர்களிடையே சென்று, பிரியங்கா உரையாடினார்.அப்போது அந்த சிறுவர்கள், 'காவலன் திருடன்' என்ற ராகுலின் பிரசார கோஷத்தை உரக்க கூறினர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரியங்கா, ''அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. அது தப்பு. நல்ல பிள்ளைகளாக இருங்கள்,'' என, சிறுவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குழந்தைகள் ஆணையம் கண்டனம்


இந்த சம்பவத்துக்கு, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு, எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:சிறுவர்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என, மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்படி இருக்கையில், சிறுவர்களை வைத்து, பிரதமர் நரேந்திர மோடி குறித்து, தரக்குறைவான கோஷங்களை எழுப்பிய, காங்., கட்சி மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-மே-201900:01:09 IST Report Abuse

Pugazh Vவழக்கம் போல பாஜகவினரின் தனிமனித தாக்குதல்கள் விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

Rate this:
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
03-மே-201920:09:19 IST Report Abuse

Ramasami Venkatesanஉயிரை விடுவேனே தவிர பா ஜ வுக்கு உதவமாட்டேன். அசடு அப்படி ஏதாவது செய்துவிடாதே, பாவம் வாத்ரா குழந்தையை வைத்துக்கொண்டு திண்டாட வைத்து விடாதே. உங்கம்மாவுக்கும் வயதாகிவிட்டது பேரன், பேத்திகளை வளர்க்கமுடியாது.

Rate this:
bal - chennai,இந்தியா
03-மே-201919:40:24 IST Report Abuse

balநீயே துண்டை காணும் துணிய காணோம் என்று ஓட போகிறாய்...உயிரோடு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன..நாடு உருப்படும்...

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X